மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள்


மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள்
x

மழைக்காலங்களில் மின் விபத்துகளை தவிர்க்கும் வழிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரியலூர்

மழை காலங்களில் மின் விபத்துகளை தவிர்ப்பதற்கான வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும். இதில் காற்று மற்றும் மழைக்காலங்களில் மின் கம்பங்கள், மின் மாற்றிகள், மின் கம்பிகள், மின் பகிர்வு பெட்டிகள் மற்றும் ஸ்டே கம்பிகள் அருகில் பொதுமக்கள் செல்ல வேண்டாம். மின் கம்பிகள் அறுந்து விழுந்தால் ெபாதுமக்கள் அதன் அருகில் செல்வதோ, அதனை தொட முயற்சிப்பதோ கூடாது. அது குறித்து அருகில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிப்பதோடு மின்வாரிய அலுவலர்கள் வரும் வரை வேறு யாரேனும் அந்த மின் கம்பிகளை தொடாமல் பார்த்து கொள்ள வேண்டும். இடி, மின்னல் ஏற்படும்போது வெட்ட வெளியிலோ, மரங்களின் அடியிலோ, மின் கம்பங்கள் மற்றும் மின் கம்பிகள் அடியிலோ சென்று நிற்கக்கூடாது. அந்த நேரங்களில் கான்கிரீட் கூரையுடன் கூடிய கட்டிடங்களிலேயே தஞ்சமடைய வேண்டும்.பாதுகாப்பான கட்டிடங்கள் இல்லாத பட்சத்தில் தாழ்வான பகுதியில் தஞ்சமடைய வேண்டும். மின் மாற்றிகள் மற்றும் மின்பகிர்வு பெட்டிகள் அருகே தண்ணீர் தேங்கியிருக்கும்போது, அதன் அருகே செல்லக்கூடாது. இது குறித்து அருகில் உள்ள மின் வாரிய அலுவலகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். மழையின்போது வீடுகளில் உள்ள சுவர்களில் தண்ணீர் கசிவு ஏற்பட்டால், அந்த பகுதியில் மின் கசிவு ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே அந்த பகுதியில் மின்சாரம் உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும். மேல்நிலை மின் கம்பிகளுக்கு அருகில் உள்ள மரக்கிளைகளை வெட்ட, மின்வாரிய அலுவலர்களை அணுக வேண்டும். இடி, மின்னல் ஏற்படும்போது டி.வி., மிக்சி, கிரைண்டர், கணினி, செல்போன் மற்றும் தொலைபேசியை பயன்படுத்தக்கூடாது. திறந்த நிலையில் உள்ள ஜன்னல், கதவு போன்றவற்றின் அருகே இருக்கக்கூடாது. மின்பாதைகளுக்கு கீழும், அருகிலும் நீளமான உலோக கம்பிகள், பொருட்களை எடுத்து செல்லக்கூடாது. மின் கம்பங்கள் மற்றும் ஸ்டே கம்பியில் கால்நடைகளை கட்டக்கூடாது. இந்த வழிமுறைகளை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என்று மின்வாா மேற்பார்வை அலுவலகத்தில் இருந்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story