சனாதனத்தின் சில கோட்பாடுகளையே எதிர்க்கிறோம் - அமைச்சர் சேகர் பாபு
சனாதனத்தின் சில கோட்பாடுகளையே நாங்கள் எதிர்க்கிறோம் என அமைச்சர் சேகர் பாபு கூறியுள்ளார்.
சேலம்,
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருப்பணியை ஆய்வு செய்த அமைச்சர் சேகர் பாபு பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தமிழகத்தில் இதுவரை 5213 கோடி ரூபாய் அளவிலான சொத்துக்கள் மீட்கப்பட்டுள்ளது என்றார்.
மேலும் அவர் பேசியதாவது,திமுக ஆட்சியின் மீது குறை சொல்வதற்கு எதுவும் இல்லை என்பதற்காக தற்போது சனாதனத்தை பற்றி பேசிவருகின்றனர்.குறிப்பாக பாஜக மாநில தலைவர் தொடந்து இது பற்றி உளறி வருகிறார்.மேலும் அவர் குழப்பத்தில் உள்ளார். தமிழ்நாட்டில் தனது கட்சியை தக்கவைக்க எதுவும் புரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறார்.என் மண் என் மக்கள் முழுவதும் தோல்வியடைந்துள்ளது.
நாங்கள் சனாதனத்தை எதிர்க்கவில்லை அதில் உள்ள சில கோட்பாடுகளையே எதிர்க்கிறோம்.பெண் கல்வி மறுப்பு,உடன்கட்டை ஏறுதல்,குலக் கல்வி போன்ற கோட்பாடுகளையே நங்கள் எதிர்க்கிறோம்.இதுவரை எங்கள் தலைவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இந்து மதத்தை அவமதித்து பேசியிருக்கிறார் என்று காட்ட முடியுமா,இறை நம்பிக்கை என்பது அவரவர் விருப்பம் இதில் திராவிட முனேற்ற கழகம் எப்போதும் தலையிட்டது கிடையாது,சமத்துவத்தின் ஒரு அங்கம் தான் திராவிட முன்னேற்ற கழகம்,இவ்வாறு அவர் கூறினார்.