அரசு விழாக்களுக்கு எங்களை அழைப்பது இல்லை


அரசு விழாக்களுக்கு எங்களை அழைப்பது இல்லை
x

அரசு விழாக்களுக்கு எங்களை அழைப்பது இல்லை என்று கலெக்டரை சந்தித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

கோயம்புத்தூர்

அரசு விழாக்களுக்கு எங்களை அழைப்பது இல்லை என்று கலெக்டரை சந்தித்து அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் மனு அளித்தனர்.

கலெக்டரிடம் மனு

கோவை மாநகர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. தலைமையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் செ.தாமோதரன் (கிணத்துக்கடவு), அமுல்கந்தசாமி (வால்பாறை), வி.பி.கந்தசாமி (சூலூர்) ஆகியோர் நேற்று கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் 4 பேரும் கலெக் டர் சமீரனை சந்தித்து மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

கோவை மாவட்டத்தில் மக்களால் தேர்வு செய்யப்பட்ட அ.தி.மு.க. மற்றும் பா.ஜனதாவை சேர்ந்த 10 எம்.எல்.ஏ.க்கள் உள்ளோம். நாங்கள் மக்கள் பணி செய்து வருகிறோம்.

ஆனால் அரசு திட்டங்களுக்கு பூஜை செய்து பணிகளை தொடங்கி வைக்கும் நிகழ்ச்சிகளுக்கு எங்களை அழைப்பது இல்லை.

அவமானப்படுத்தும் செயல்

பள்ளிகளில் மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் விழாக்களுக்கும் எங்களுக்கு அழைப்பு கொடுப்பது இல்லை.

சில நேரத்தில் அழைப்பு கொடுத்தாலும், நாங்கள் செல்வதற்கு முன்பே தி.மு.க. நிர்வாகிகளை வைத்து மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை கொடுத்து விடுகிறார்கள். இது எங்களை அவமானப்படுத்துவது போல் இருக்கிறது.

மருதமலையில் கோவில் மண்டபம் கட்ட பூமிபூஜை நிகழ்ச்சி நடந்தது. இதில், அந்த தொகுதி எம்.எல்.ஏ.வான அம்மன் அர்ச்சு னன், அந்த வார்டை சேர்ந்த அ.தி.மு.க. கவுன்சிலரை அழைக்க வில்லை.

மாறாக தி.மு.க. நிர்வாகிகளை வைத்து பூமி பூஜை போட்டு பணிகளை தொடங்கி உள்ளனர். இதுபோன்று பல பிரச்சினைகள் உள்ளன.

உரிய நடவடிக்கை

இது போன்ற செயல்களால், மக்களால் தேர்வு செய்யப்பட்ட எங்களுக்கு பொதுமக்கள் மத்தியில் எப்படி மரியாதை இருக்கும். கோவை மாவட்டத்தில் அரசு நிகழ்ச்சிகள் அனைத்துமே தி.மு.க. நிர்வாகிகளால் தான் நடந்து வருகிறது. இதற்கு மாவட்ட நிர்வாக மும் சாதகமாக இருக்கிறது.

குறிப்பாக கோவை -அவினாசி ரோட்டில் மேம்பாலம் கட்டப் பட்டு வருகிறது. அதன் தூணில் தி.மு.க.வினர் சுவரொட்டிகள் ஒட்டி உள்ளனர். அதை மாவட்ட நிர்வாகம் கண்டுகொள்ள வில்லை. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இதைத்தொடர்ந்து அம்மன் அர்ச்சுனன் எம்.எல்.ஏ. நிருபர்களி டம் கூறுகையில், அரசு விழாக்களில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை புறக்கணிப்பது தொடர்பாக கலெக்டரிடம் மனு கொடுத்தோம். அதற்கு அவர் மக்கள் பிரதிநிதிகள் யாரையும் புறக்கணிக்கக் கூடாது என்று ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளதாக கூறினார். எனவே அவர் உரிய நடவடிக்கை எடுப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்றார்.


Next Story