நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
காவிரி நதிநீர் உரிமையை மீட்டெடுக்க வலியுறுத்தியும், காவிரி ஒழுங்காற்று ஆணைய உத்தரவுப்படி தமிழகத்திற்கு தேவையான காவிரி நீரை திறந்து விட உடனடியாக மத்திய அரசு நடவடிக்கை எடுக்கவும், காவிரி நதிநீர் உரிமையில் சரியான நடவடிக்கை எடுக்காத தி.மு.க. அரசை கண்டித்தும் ராமநாதபுரத்தில் நேற்று நாம் தமிழர் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் கண்இளங்கோவன் தலைமை தாங்கினார். மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜி முன்னிலை வகித்தார். இதில், மண்டல செயலாளர் குமரன், மேற்கு மாவட்ட செயலாளர் காமராஜ், கிழக்கு மாவட்ட தலைவர் நாகூர்கனி, மேற்கு மாவட்ட செயலாளர் இசையரசன், முதுகுளத்தூர் தொகுதி செயலாளர் சிவக்குமார், திருவாடானை தொகுதி தலைவர் சகாபுதீன், மாநில பாசறை ஒருங்கிணைப்பாளர் ஜெயா, மாநில கொள்கை பரப்பு செயலாளர் பிரேம், நகர் செயலாளர் வெங்கடேஷ் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.