நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
ஓமலூரில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
சேலம்
ஓமலூர்:-
ஓமலூர் பஸ் நிலையம் அண்ணா சிலை அருகில் நாம் தமிழர் கட்சி சார்பில் மின்கட்டண உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடந்தது. நாம் தமிழர் கட்சி ஓமலூர் தொகுதி செயலாளர் காளியப்பன் தலைமை தாங்கினார். சட்டமன்ற தொகுதி தலைவர் மோகன் முன்னிலை வகித்தார். மாநில கொள்கை பரப்பு செயலாளர் நல்லான் கலந்து கொண்டு பேசினார். மேற்கு தொகுதி பொறுப்பாளர் அரவிந்தன், தொகுதி பொருளாளர் பிரவீன் குமார், சேலம் தெற்கு தொகுதி பொறுப்பாளர் தீபக், தமிழ் மீட்சி பாசறை பாண்டியன், ஊழல் ஒழிப்பு பாசறை மோகனவேல், தொகுதி துணை செயலாளர் முருகன், தொகுதி இணை செயலாளர் அய்யப்பன், துணைத்தலைவர் நிரஞ்சன் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story