தக்கலையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்


தக்கலையில் நாம் தமிழர் கட்சி ஆர்ப்பாட்டம்
x

தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

கன்னியாகுமரி

தக்கலை,

தக்கலையில் நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டம்

குளச்சல் மற்றும் பத்மநாபபுரம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

அக்னிபத் திட்டம், ஜி.எஸ்.டி. வரி உயர்வுக்கு காரணமான மத்திய அரசை கண்டித்தும், வீட்டு வரி, மின் கட்டண உயர்வுக்கு காரணமான தமிழக அரசை கண்டித்தும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு தொகுதி தலைவர் சீலன் தலைமை தாங்கினார். இதில் மாநில இளைஞரணி செயலாளர் கிம்லர் மற்றும் நிர்வாகிகள் அனிட்டர் ஆல்வின், சந்திரலால் உள்பட பலர் பேசினர்.

1 More update

Next Story