"பாஜகவின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்


பாஜகவின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவீட்
x
தினத்தந்தி 17 July 2023 2:54 PM IST (Updated: 17 July 2023 2:56 PM IST)
t-max-icont-min-icon

பாஜகவின் ஜனநாயக விரோத செயலுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

வணக்கம் கர்நாடகா!

பீகார் மாநிலம் பாட்னாவில் நடைபெற்ற மதசார்பற்ற ஜனநாயக சக்திகளின் கூட்டத்திற்கு பிறகு இப்போது அழகிய நகரமான பெங்களூருவில் கூடியிருக்கிறோம்.

இந்த முக்கியமான தருணத்தில், பாஜகவின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக நாம் ஒன்றுபட்டு நிற்க வேண்டியது அவசியம். பாஜகவின் பிற்போக்கு அரசியலை மக்கள் நிராகரித்ததற்கு, கர்நாடகாவின் சமீபத்திய சட்டமன்றத் தேர்தல் ஒரு சக்திவாய்ந்த உதாரணம். இதை தேசிய அளவில் பிரதிபலிப்போம்.

பாஜகவிற்கு எதிராக ஒன்றுபடுவது அவசியம். ஒன்றாக, ஜனநாயகத்தை பாதுகாப்போம் மற்றும் நமது சிறந்த தேசத்திற்கு பிரகாசமான எதிர்காலத்தை உறுதி செய்வோம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Related Tags :
Next Story