நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும்
நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும் என்று கான்ஸ்டபிள் பயிற்சி நிறைவு விழாவில் மத்திய தொழிற் பாதுகாப்பு படை தென் மண்டல தலைவர் சரவணன் பேசினார்.
பயிற்சி நிறைவு விழா
அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் 47 மற்றும் 48-வது படை பிரிவுகளுக்கான கான்ஸ்டபிள் பயிற்சி 657 பெண்கள், 115 ஆண்கள் என மொத்தம் 772 பேருக்கு கடந்த 11 மாதங்களாக நடைபெற்றது.
இந்த நிலையில் பயிற்சி நிறைவு விழா, பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய முதல்வர் சாந்தி ஜி ஜெயதேவ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் தென் மண்டல தலைவர் சரவணன் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களை பாராட்டி கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிறப்பாக பணியாற்ற வேண்டும்
தற்போது நமது நாடு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம் ஆகிய அச்சுறுத்தல் நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. நமது அண்டை நாடுகள் சில நமது உள்நாட்டு அமைதியை அழித்து நமது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் பயிற்சி நிறைவு செய்துள்ள அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்கள், நாடாளுமன்ற கட்டிடம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணி மற்றும் ரிசர்வ் வங்கி, சுரங்கம், மெட்ரோ ெரயில் நிலையங்கள், அணு உலைகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் பாதுகாப்பு பணிக்கு செல்வீர்கள். பயிற்சி நிறைவு செய்த அனைவரும் நாட்டின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். உங்கள் அனைவரின் எதிர்கால முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.அரக்கோணத்தை அடுத்த நகரிகுப்பத்தில் உள்ள மத்திய தொழிற் பாதுகாப்பு படை மண்டல பயிற்சி மையத்தில் 47 மற்றும் 48-வது படை பிரிவுகளுக்கான கான்ஸ்டபிள் பயிற்சி 657 பெண்கள், 115 ஆண்கள் என மொத்தம் 772 பேருக்கு கடந்த 11 மாதங்களாக நடைபெற்றது.
இந்த நிலையில் பயிற்சி நிறைவு விழா, பயிற்சி மைய வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு பயிற்சி மைய முதல்வர் சாந்தி ஜி ஜெயதேவ் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக மத்திய தொழிற் பாதுகாப்பு படையின் தென் மண்டல தலைவர் சரவணன் கலந்து கொண்டு வீரர், வீராங்கனைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
பின்னர் பயிற்சியில் சிறந்து விளங்கியவர்களை பாராட்டி கோப்பை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பேசினார்.
அப்போது அவர் பேசியதாவது:-
சிறப்பாக பணியாற்ற வேண்டும்
தற்போது நமது நாடு பாதுகாப்பு சவால்களை எதிர்கொண்டுள்ளது. பயங்கரவாதம் மற்றும் நக்சலிசம் ஆகிய அச்சுறுத்தல் நம் நாட்டில் தலைவிரித்தாடுகிறது. நமது அண்டை நாடுகள் சில நமது உள்நாட்டு அமைதியை அழித்து நமது பொருளாதாரத்தை சீர்குலைக்கும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தநிலையில் பயிற்சி நிறைவு செய்துள்ள அனைவரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பன்னாட்டு விமான நிலையங்கள், துறைமுகங்கள், நாடாளுமன்ற கட்டிடம், முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பு பணி மற்றும் ரிசர்வ் வங்கி, சுரங்கம், மெட்ரோ ெரயில் நிலையங்கள், அணு உலைகள், எண்ணெய் நிறுவனங்கள் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடங்கள் பாதுகாப்பு பணிக்கு செல்வீர்கள். பயிற்சி நிறைவு செய்த அனைவரும் நாட்டின் பாதுகாப்பையும், முன்னேற்றத்தையும் கருத்தில் கொண்டு சிறப்பாக பணியாற்ற வேண்டும். உங்கள் அனைவரின் எதிர்கால முயற்சிகளும் வெற்றியடைய வாழ்த்துகிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் பயிற்சி முடித்த வீரர்களின் குடும்பத்தினர் மற்றும் உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.