புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட முயற்சி


புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட முயற்சி
x

புதிதாக திறந்த டாஸ்மாக் கடையை நாம் தமிழர் கட்சியினர் முற்றுகையிட முயற்சி செய்தனர்.

ராணிப்பேட்டை

பனப்பாக்கம் பேரூராட்சிக்குட்பட்ட அரக்கோணம் - ஓச்சேரி செல்லும் சாலையில் உள்ள சந்திப்பில் புதிதாக டாஸ்மாக் மதுக்கடை அமைக்கும் பணிகள் கடந்த இரண்டு மாதங்களாக நடைபெற்றுவந்தது. பணிகள் முடிக்கப்பட்டு நேற்று புதிய மதுக்கடை திறக்கப்பட்டது.

இந்த நிலையில் புதிதாக திறக்கப்பட்ட மதுக்கடையை மூடக்கோரி நேற்று நாம் தமிழர் கட்சியினர் 30-க்கும் மேற்பட்டோர் பஸ் நிலையத்திலிருந்து ஊர்வலமாக சென்று மதுக்்கடையை முற்றுகையிட முயன்றனர். அப்போது நெமிலி சப்-இன்ஸ்பெக்டர் சிரஞ்சீவிலு தலைமையிலான போலீசார் அவர்களை தடுத்து கலைந்து செல்லுமாறு கூறினர். உடனே அவர்கள் கடைவீதிகளில் உள்ள வணிகர்கள் மற்றும் பொதுமக்களிடம் கடையை மூடுவதற்கு ஆதாரவாக கையெழுத்து வாங்கி மாவட்ட கலெக்டருக்கு அனுப்ப உள்ளதாக கூறினர். இதனால் அப்பகுதி இரண்டு மணிநேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதில் நாம் தமிழர் கட்சியின் சோளிங்கர் தொகுதி செயலாளர் ராஜ்குமார், மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் பாவேந்தன், மண்டல செயலாளர் தவுபிக் பிக்ரத், அசேன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


Next Story