'ஆவின்' பாக்கெட்டில் இந்தி சொல்லை பயன்படுத்த மாட்டோம்; தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு


ஆவின் பாக்கெட்டில் இந்தி சொல்லை பயன்படுத்த மாட்டோம்; தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு
x

‘ஆவின்’ பாக்கெட்டில் இந்தி சொல்லை பயன்படுத்த மாட்டோம்; தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு வைகோ வரவேற்பு.

சென்னை,

ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தமிழ்நாடு, கர்நாடகா, கேரள மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள அறிவிக்கை மூலம் இந்தி மொழியைத்திணிக்க மத்திய பா.ஜ.க அரசு முனைந்து உள்ளது.

தமிழ்நாட்டின் ஆவின் நிறுவனம், கர்நாடகத்தின் நந்தினி பால் நிறுவனம், கேரளாவின் மில்மா பால் நிறுவனம் உள்ளிட்ட பால் உற்பத்தியாளர் கூட்டமைப்புகள் விற்பனை செய்யும் தயிர் உறைகளில், "தஹி" என்ற இந்தி சொல்லைத்தான் ஆகஸ்ட்.1-ந்தேதி முதல் பயன்படுத்தவேண்டும். தயிர் உறைகளில் தயிரின் ஆங்கிலப்பெயரை நீக்கவேண்டும் என உத்தரவிட்டு இருக்கிறது. இத்தகைய இந்தித்திணிப்பு கடும் கண்டனத்துக்குரியது.

மத்திய அரசின் உத்தரவுக்குப் பணியாமல் ஆவின் தயிர் உறைகளில் இந்தி சொல்லைப்பயன்படுத்த மாட்டோம் என திராவிட மாடல் தமிழ்நாடு அரசு பதிலடி கொடுத்திருப்பது வரவேற்கத்தக்கது. இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் இந்தித்திணிப்பு அறிவிக்கையை மத்திய அரசு உடனடியாகத் திரும்பப்பெறவேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story