பருத்திக்கான இறக்குமதி வரியை நிரந்தரமாக ரத்து செய்வோம்


பருத்திக்கான இறக்குமதி வரியை நிரந்தரமாக ரத்து செய்வோம்
x
தினத்தந்தி 12 Nov 2022 12:15 AM IST (Updated: 12 Nov 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பருத்திக்கான இறக்குமதி வரியை மத்திய அரசிடம் வலியுறுத்தி நிரந்தரமாக ரத்து செய்வோம் என்று கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.

கோயம்புத்தூர்

பருத்திக்கான இறக்குமதி வரியை மத்திய அரசை வலியுறுத்தி நிரந்தரமாக ரத்து செய்வோம் என்று கைத்தறித் துறை அமைச்சர் ஆர்.காந்தி கூறினார்.

ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு

ஜவுளி மற்றும் பின்னலாடை அமைப்புகள் சார்பில் கோவை தென்னிந்திய பின்னலாடை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில், '60-வது ஜவுளி தொழில்நுட்ப கருத்தரங்கு' நேற்று நடைபெற்றது.

இதை தமிழக கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி தொடங்கி வைத்தார். அப்போத அவர் பேசியதாவது:-

தொழில்நுட்பம் சார்ந்த ஜவுளி உற்பத்திக்கான தேவை அதிக ரித்து வருகிறது. குறிப்பாக மருத்துவம் மற்றும் பாதுகாப்பு துறை யில் தொழில்நுட்ப ஜவுளி குறித்த ஆராய்ச்சி சிறப்பாக மேற் கொள்ளப்பட்டு வருகிறது.

இதன் மூலம் ஜவுளி துறையில் அதிக அளவு வேலைவாய்ப்பு உருவாகி உள்ளது. சென்னையில் நடை பெற உள்ள ஜவுளித்துறை தொழில்நுட்ப மாநாட்டுக்கு சர்வதேச அளவிலான நிறுவனங்கள் அழைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து அமைச்சர் காந்தி நிருபர்களிடம் கூறியதாவது:-

வரவேற்பு இல்லை

தமிழக அரசு சார்பில் ஜவுளித்துறை வளர்ச்சிக்காக பல்வேறு நட வடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பிரதான குறையாக செஸ் வரியை முன் வைத்தனர். அடுத்த 2 மாதங்களில் அது ரத்து செய்யப்பட்டது.

ஜவுளி, நெசவு மற்றும் கூட்டுறவுக்கு என ஒரே ஆணையர் இருந்த நிலையில் ஜவுளித்துறைக்கென என முதல் முறையாக தனி ஆணையர் நியமிக்கப்பட்டு ஜவுளித்துறை அமைப் புகளுடன் ஆலோசனை செய்யப்பட்டு அத்துறை மேம்படுத்தப் பட்டு வருகிறது.

2016-ம் ஆண்டு முந்தைய ஆட்சியில் மினிடெக்ஸ்டைல் எனும் திட்டம் கொண்டு வரப்பட்டது.

2 ஏக்கர் பரப்பளவில் சிறிய மில் யூனிட்டுகள் அமைப்பதற்கான திட்டத்தில் ரூ.2.5 கோடி வரை அரசு மானியம் வழங்குவதாக அறிவித்தது.

ஆனால் அந்த மானிய தொகையை சாலை அமைப்பதற்காக மட்டுமே பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. எனவே அந்த திட்டத்திற்கு பெருமளவு வரவேற்பு இல்லை.

டெக்ஸ்டைல் பூங்கா

மானிய தொகையை கட்டிடங்கள் கட்டவும் பயன்படுத்த அனும திக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படை யில் திட்டத்தில் மாற்றம் செய்து அரசாணை வெளியிடப்பட்டது. இந்த நிலையில் தற்போது 300-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விண்ணப்பித்துள்ளன.

சேலத்தில் டெக்ஸ்டைல் பூங்கா அமைப்பதற்கான திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அங்கு 150 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.500 கோடி மதிப்பிலான திட்டம் தயாராகி வருகிறது.

இறக்குமதி வரி

ஜவுளி பயன்பாட்டிற்கான பருத்தி உற்பத்தியை அதிகரிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பருத்திக்கான 11 சதவீத இறக்குமதி வரி தமிழக அரசின் வலியுறுத்தலின்படி இந்த மாதம் வரை ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதை நிரந்தரமாக நீக்க மத்திய அரசை வலியுறுத்தி உள்ளோம். யாருக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் அதை செய்வதாக மத்திய மந்திரி உறுதி அளித்துள்ளார்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story