40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்


40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்
x
தினத்தந்தி 12 March 2023 12:15 AM IST (Updated: 12 March 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கோவையில் நடந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

கோயம்புத்தூர்


கோவை

வருகிற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று கோவையில் நடந்த விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

தி.மு.க.வில் இணையும் நிகழ்ச்சி

தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்ட நேற்று காலை 11.15 மணிக்கு கோவை வந்தார். அங்கு அவருக்கு தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதையடுத்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சின்னியம்பாளையத்துக்கு சென்றார். அங்கு, மாற்று கட்சிகளை சேர்ந்த சுமார் 4 ஆயிரம் பேர், முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணையும் விழா நடைபெற்றது.

விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வந்ததால் இந்த நிகழ்ச்சி தற்போது நடைபெறுகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் அ.தி.மு.க., தே.மு.தி..க. உள்ளிட்ட கட்சிகளில் இருந்து விலகி தி.மு.க.வில் இணைந்து இருப்பதற்கு வரவேற்பு தெரிவிக்கிறேன். தாய் கழகத்துக்கு வந்து இருப்பதற்காக தாய் உள்ளத்துடன் வரவேற்கிறேன்.

வரலாற்றில் இடம்பிடித்த கட்சி

நாட்டின் வரலாற்றில் இடம் பெற்று இருக்க கூடிய கட்சிகள் உண்டு. அதே நேரத்தில் திடீர் என தோன்றும் கட்சிகளையும் பார்க்கிறோம்.

அப்படி தோன்றக்கூடிய கட்சிகள் எல்லாம் தொடங்கப்பட்ட அடுத்தநாளே, அன்றே நாங்க தான் அடுத்த முதல்-அமைச்சர், அடுத்தது எங்க ஆட்சி என்று சொன்னவர்கள் இப்போது அனாதைகளாக அலைந்து கொண்டு இருக்கும் காட்சிகளையும் நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.

தி.மு.க. 1949-ல் கட தொடங்கப்பட்டாலும், 1957- ல் தேர்தல் களத்திற்கு வந்து, 15 இடங்களை பிடித்தோம். 15 பேரில் ஒருவராக கலைஞர் குளித்தலை தொகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட் டார்.

1962 சட்டமன்ற தேர்தலில் 50 பேர் வெற்றி பெற்று சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியாக இருந்தோம். 1967-ஆம் ஆண்டில் அண்ணா தலைமையில் தி.மு.க. ஆட்சி பொறுப்பு ஏற்றது. அண்ணா பதவி வகித்த ஒரு வருடத்தில் பல திட்டங்களை செயல்படுத்தினார்.

3 தீர்மானங்கள்

சட்டமன்றத்தில் பல முக்கிய தீர்மானங்களை நிறைவேற்றினார். சீர்திருத்த திருமணங்கள் அனைத்தும் சட்டப்படி செல்லும் என்ற முதல் தீர்மானம், இரு மொழி கொள்கை என்ற 2-வது தீர்மானம், அதற்கு அடுத்து 3-வது தீர்மானமாக தமிழ்நாட்டுக்கு தமிழ்நாடு என்ற பெயர் சூட்டும் வரலாற்று சிறப்பு மிக்க தீர்மானங்களை கொண்டு வந்தார். தமிழன் தன்மானத்தோடு வாழ காரணம் இந்த தீர்மானங்கள் தான்.

அண்ணாவின் மறைவுக்கு பிறகு கருணாநிதி முதல்- அமைச்சராக பொறுப்பு ஏற்றார். மீண்டும் 1971-ல் சட்டமன்ற பொதுத்தேர்தல் வருகிறது.

அதில் தமிழக வரலாற்றில் 184 என்ற சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆட்சி பொறுப்பேற்ற கட்சி தி.மு.க.வை தவிர வேறு எதுவும் இல்லை.

கருணாநிதி எத்தனையோ திட்டங்களை செயல்படுத்தினார். இந்தியாவில் நெருக்கடி நிலையை இந்திராகாந்தி அமல்படுத்தினார். அப்போது தி.மு.க. ஆட்சியில் இருக்கிறது.

நெருக்கடி நிலை

இந்திரா காந்தியிடம் இருந்து தூது வந்தது. நெருக்கடியை எதிர்க்க கூடாது என சொன்னார்கள். எதிர்த்தால் அடுத்த நிமிடம் ஆட்சி கவிழும் என்றனர்.

ஆட்சி என்ன உயிரே போனாலும் கவலைப்பட மாட்டேன் என்று தலைவர் கருணாநிதி கூறினார். நெருக்கடி நிலையை ரத்து செய்ய வேண்டும்,

கைதான தலைவர்களை விடுதலை செய்ய வேண்டும் என சென்னை கடற் கரையில் மிகப்பெரிய கூட்டம் நடத்தி தீர்மானம் போட்டார். தீர்மானம் நிறைவேற்றப்பட்ட உடன் தி.மு.க. ஆட்சி கவிழ்க்கப் பட்டு நாங்கள் கைது செய்யப்பட்டோம். ஆட்சி கலைக்கப்பட்டு 13 ஆண்டுகள் ஆட்சிக்கு வர முடியவில்லை.

அதன்பின்னர் 1989-ல் ஆட்சி பொறுப்புக்கு வருகிறோம். 1991-ல் விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக இருந்தோம் என்று நமது ஆட்சி மீண்டும் கலைக்கப்படுகிறது.

1996 -ல் மீண்டும் ஆட்சிக்கு வருகி றோம். 2001-ல் இல்லை. 2006-ல் மீண்டும் 5-வது முறையாக தலைவர் கருணாநிதி ஆட்சிப்பொறுப்பு ஏற்கிறார்.

இப்போது 2021-ல் எனது (மு.க.ஸ்டாலின்) தலைமையில் தி.மு.க. ஆட்சி 6-வது முறையாக பொறுப்பு வகித்து ஆட்சி நடத்தி வருகிறது.

இந்த நாட்டில் தி.மு.க.வை போல வெற்றி பெற்ற கட்சியும் கிடை யாது. தோல்வி பெற்ற கட்சியும் கிடையாது. வெற்றி, தோல்வி பற்றி கவலைப்படாமல் மக்களுக்காக பாடுபடும் கட்சி தி.மு.க.

தேர்தல் வாக்குறுதிகள்

தேர்தல் நேரத்தில் கொடுக்கப்பட்ட உறுதிமொழிகள் காப்பாற்றப் பட்டு உள்ளது. 6 -வது முறையாக நடைெபறும் தி.மு.க. ஆட்சி. சொல்வதை மட்டுமல்ல சொல்லாததையும் செய்யும் ஆட்சியாக என்னுடைய ஆட்சி இருக்கிறது.

பஸ்சில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று சொன்னோம். உயர் கல்வி படிக்கும் மாணவிகளுக்கு உதவித்தொகையாக மாதம் ரூ.1000-ம் வழங்கப் படும் புதுமைப்பெண் திட்டத்தை செயல்படுத்தி வருகிறோம்.

இதனை தேர்தல் அறிக்கையில் நாங்கள் சொல்ல வில்லை. சொல்லாததையும் செய்து வருகிறோம்.

ஏற்கனவே சட்டமன்ற தேர்தலில் 10 ஆயிரம் வாக்கு வித்தியாசத் தில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று இருந்தது.

இப்போது நடைபெற்ற ஈரோடு கிழக்கு இடைதேர்த லில், ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் 66 ஆயிரம் வாக்கு வித்தியாசத் தில் வெற்றி பெற்று இருக்கிறார்.

இதற்கு காரணம் இந்த ஆட்சி யின் மீது மக்களுக்கு ஏற்பட்டு இருக்கும் நம்பிக்கை. இதனால் தான் இவ்வளவு பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளோம்.

அனைத்து மாநிலங்களிலும் வெற்றி

வரும் நாடாளுமன்ற தேர்தலில் இதே போன்ற வெற்றியை பெற் றெடுக்க வேண்டும். அதற்கு உறுதியளிக்கும் நிகழ்ச்சியாகத்தான் இது அமைந்துள்ளது.

இந்த ஆட்சியின் திட்டங்கள் தொடர, சாதனைகள் மலர, ஆட்சி தொடர நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற இன்றே களமிறங்க வேண்டும். மதம், சாதியை பயன்படுத்தி குழப்பத்தை ஏற்படுத்தி ஆட்சியை வீழ்த்திவிடலாம் என்ற சிலர் முயற்சிக்கிறார்கள்.

அதற்கெல்லாம் செவிசாய்க்காமல் நம்முடைய இலக்கு என்பது நாடாளுமன்ற தேர்தல்தான் என்று இருக்க வேண்டும்.

கடந்த முறை நாடாளுமன்ற தேர்தலில் ஒரு இடத்தை மட்டும் இழந்தோம். இந்த முறை அதுவும் இழக்க கூடாது. புதுச்சேரி உள்பட 40 இடத்தையும் பெற வேண்டும்.

நாடும் நமதே.. நாளையும் நமதே... மதசார்பற்ற கூட்டணி வெற்றி தமிழ்நாட்டில் மட்டுமல்ல. இந்தியா முழுவதும் இருக்கக்கூடிய அனைத்து மாநிலங்களிலும் நாம் மிகப்பெரிய வெற்றி பெறுவதற்கான முயற்சியில் ஈடுபட போகின்றோம்.

அதற்கு நீங்கள் பக்கபலமாக துணையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

விழாவில் முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளி வாள் பரிசாக வழங்கப்பட்டது.

கட்சி நிர்வாகிகள்

இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, மு.பெ. சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், காந்தி, முன்னாள் அமைச்சர்கள் பொங்கலூர் பழனிசாமி, மு.கண்ணப்பன், கோவை தெற்கு மாவட்ட செயலாளர் தளபதி முருகேசன், வடக்கு மாவட்ட செயலாளர் தொ.அ.ரவி, செந்தில் கார்த்திகேயன், முன்னாள் எம்.எல்.ஏ. வி.சி.ஆறுக்குட்டி, வடக்கு மாவட்ட துணைச்செயலாளர் அசோக்பாபு ஆறுக்குட்டி, மேயர் கல்பனா, கோவை ப.தங்கவேல், நித்யா க.மனோகரன், தலைமை பொதுக்குழு உறுப்பினர் நேருநகர் பழனிசாமி, எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் சுரேஷ்குமார், பகுதி செயலாளர்கள் பொன்னுசாமி, சிவா என்ற பழனிசாமி, அஞ்சுகம் பழனியப்பன், சரவணம்பட்டி மாணிக்கம், கோபாலகிருஷ்ணன், ஆரோக்கிய ஜான் உள்பட தி.மு.க.வினர் திரளாக கலந்து கொண்டனர்.

---

Image4 File Name : M_ABULKALAMAZATH_Staff_Reporter-16016214.jpg

----

Reporter : M.ABULKALAMAZATH_Staff Reporter Location : Coimbatore - Coimbatore


Next Story