நலிவுற்ற விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்


நலிவுற்ற விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம்
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

அய்யம்பேட்டையில் நலிவுற்ற விவசாயிகள் சங்க ஆலோசனை கூட்டம் நடந்தது.

தஞ்சாவூர்

அய்யம்பேட்டை:

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட ஆலோசனை மற்றும் பாபநாசம் ஒன்றிய செயற்குழு கூட்டம் அய்யம்பேட்டையில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ரியாஜ் தலைமை தாங்கினார்.துணை தலைவர் ஜான் போஸ்கோ, பாபநாசம் ஒன்றிய தலைவர் ராஜ் முகமது ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாபநாசம் ஒன்றிய செயலாளர் ஆனந்த் வரவேற்றார். சங்கத்தின் மாநில தலைவர் முகமது இப்ராகிம் கலந்துகொண்டு பேசினார். இதில் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்து கொண்டனர். வருகிற ஜனவரி மாதம் 25-ந் தேதி காவிரி மீட்பு மாநாடு தஞ்சையில் நடத்துவது, காவிரியில் தண்ணீர் தர மறுக்கும் கர்நாடக அரசை கலைக்க மத்திய அரசை கேட்டுக் கொள்வது, வறட்சியால் பாதிக்கப்பட்ட டெல்டா மாவட்ட விவசாயிகளுக்கு மத்திய அரசும், கர்நாடகா அரசும் தங்களது நிதியிலிருந்து ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வழங்க வேண்டும், கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ளுவதை நிறுத்த ேவண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. முடிவில் அய்யம்பேட்டை கிளை தலைவர் ரகீம் நன்றி கூறினார்.


Next Story