செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்


செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம்
x
தினத்தந்தி 12 Feb 2023 12:15 AM IST (Updated: 12 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூரில் செல்வமகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

இந்திய அஞ்சல்துறை சார்பில் நாடு முழுவதும் செல்வ மகள் சேமிப்பு திட்ட சிறப்பு முகாம் நடந்தது வருகிறது. இதையடுத்து, திருச்செந்தூர் தலைமை அஞ்சலகமும், பி.ஜி. ஆஸ்பத்திரி நிறுவனர் ராமமூர்த்தியும் இணைந்து திருச்செந்தூர் தலைமை அஞ்சல் அலுவலகத்தில் சிறப்பு முகாமை நடத்தினர். திருச்செந்தூர் அஞ்சல் உதவி கோட்ட கண்காணிப்பாளர் ஐடா எபநேசர் ராஜாபாய் தலைமை தாங்கினார். தலைமை அஞ்சலக அதிகாரி (பொறுப்பு) ரவிமோகன் முன்னிலை வகித்தார். ஆஸ்பத்திரி மக்கள் தொடர்பு அலுவலர் ஜெயந்திநாதன் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு கணக்கு புத்தகங்களை வழங்கி முகாமை தொடங்கி வைத்தார். முகாமில் 50-க்கும் மேற்பட்ட புதிய செல்வ மகள் சேமிப்பு கணக்குகள் தொடங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், திருச்செந்தூர் அஞ்சல் வணிக மேம்பாட்டு அலுவலர் முகம்மது சமீம், உதவி அஞ்சலக அதிகாரி பாஸ்கரன், அஞ்சல் கணக்கு பிரிவு மேற்பார்வையாளர் கேசவன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



1 More update

Next Story