முககவசம் அணிந்தால் வசமாகும் உயிர் பாதுகாப்பு


முககவசம் அணிந்தால் வசமாகும் உயிர் பாதுகாப்பு
x

முககவசம் அணிந்தால் உயிர் பாதுகாப்பு வசமாகும்.

அரியலூர்

உலகையே உலுக்கிய ஒற்றை வார்த்தை கொரோனா. அண்டை அயலாருடன் மக்கள் பேசக்கூட முடியாமல் வீட்டிலேயே முடங்க வைத்த நோய். வீதியில் கூட நடமாட கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. முககவசம் அணியாமல் வீதியில் நடமாடினால் அபராதம் விதிக்கப்பட்டது. அந்த அளவுக்கு கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்ட தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டது.

ஊரடங்கால் வேலையிழந்து, வாழ்விழந்தவர்கள் ஏராளம். மக்கள் வாழ்க்கை முறையே கொரோனாவுக்கு முன், கொரோனாவுக்கு பின் என்று குறிப்பிடும் வகையில் பல மாற்றங்களை அந்த நோய் ஏற்படுத்தி விட்டது. பொருளாதார வளர்ச்சிக்கும் தடைக்கல்லானது.

முக கவசம்

கொரோனா பரவியபோது, அதனால் பாதிக்கப்பட்டு மூச்சுத்திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் வசதிக்கு ஏங்கி நின்றவர்கள் பலர். இந்நிலையில் கொரோனா தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு முதல் தவணை, 2-வது தவணை செலுத்தப்பட்டு கடைசியாக பூஸ்டர் தடுப்பூசியும் செலுத்தப்பட்டது. ஆனால் பூஸ்டர் தடுப்பூசியை செலுத்துவதற்கு பெரும்பாலான மக்களிடம் ஆர்வம் இல்லாமல் போனது.

அதற்கு காரணம் கொடூரமாக பரவிய கொரோனா கட்டுக்குள் வந்ததுதான். இருப்பினும் கொரோனா முற்றிலுமாக நம்மை விட்டு இன்னும் சென்றுவிடவில்லை. இன்னும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் உள்ளனர். பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை வேண்டும் என்றால் குறைவாக இருக்கலாம். ஆனால் கொரோனாவின் தாக்கம் முற்றிலும் ஒழிந்துவிடவில்லை.

அலட்சியம்

கொரோனா பரவிய காலத்தின் அதன் கொடூரத்தை அறிந்ததன் காரணமாக சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை வீதிக்கு வந்தால் முககவசத்தை கட்டாயம் அணிந்து சென்றனர். ஆனால் பாதிப்பு குறைய, குறைய மக்களிடமும் விழிப்புணர்வும் குறைந்து போய்விட்டது. முககவசத்தை அணிவதை தற்போது பலர் முற்றிலும் தவிர்த்து விட்டனர்.

முககவசம் கட்டாயம், அணியாவிட்டால் அபராதம் என்று தற்போது அரசு அறிவிக்கவில்லை. ஆனால் முககவசம் அணிவதன் அவசியத்தை அரசு ஒவ்வொரு முறையும் உணர்த்தியே வருகிறது. அதை பலர் ஏற்றுக்கொள்ளாமல் அலட்சியமாகவே இருக்கிறார்கள்.


Next Story