குற்றாலத்தில் களைகட்டிய சீசன் - ஆயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்


குற்றாலத்தில் களைகட்டிய சீசன் - ஆயிரக்கணக்கில் குவிந்த சுற்றுலாப்பயணிகள்
x

இன்று விடுமுறை நாள் என்பதால், குற்றாலத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது.

தென்காசி,

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் தற்போது குளுகுளு சீசன் நிலவுகிறது. அவ்வப்போது சாரல் மழை விட்டு விட்டு பெய்வதுடன், அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

இந்த இதமான சீசனை அனுபவிப்பதற்காக, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் குற்றாலத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர்.

இதற்கிடையில் இன்று விடுமுறை நாள் என்பதால், குற்றாலத்தில் கூட்டம் அதிகரித்து காணப்படுகிறது. ஆயிரக்கணக்கான சுற்றுலாப்பயணிகள் குவிந்தனர். அவர்கள் அருவிகளில் வரிசையில் காத்திருந்து ஆனந்தமாய் நீராடி வருகின்றனர்.

1 More update

Next Story