திருமண மேடை வடிவமைப்பாளர் குத்திக்கொலை


திருமண மேடை வடிவமைப்பாளர் குத்திக்கொலை
x

திருமண மேடை வடிவமைப்பாளர் குத்திக்கொலை

கோயம்புத்தூர்

போத்தனூர், ஜூலை

கோவை குனியமுத்தூரில்திருமண நிகழ்ச்சிகளுக்கான மேடை வடிவமைப்பாளர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அண்ணன், தம்பியை போலீசார் கைது செய்தனர்.

திருமணமேடை வடிவமைப்பாளர்

கோவை சுந்தராபுரம் சிட்கோ, எல்.ஐ.சி. காலனியை சேர்ந்தவர் ஆனந்தன்.இவருடைய மகன் சந்தோஷ்குமார் (வயது 34).இவர் திருமண நிகழ்ச்சிகளுக்கான மேடை அலங்கார வடிவமைப்பாளராக தனியாக தொழில் நடத்தி வந்தார். இவர் ஆரம்பத்தில் இந்த தொழிலை குனியமுத்தூர் பி.கே.புதூரை சேர்ந்த மணிகண்டன் என்பவருடன் பங்குதாரராக சேர்ந்து தொழில் செய்துவந்துள்ளார். இதில் ரூ.4 லட்சம் தனக்கு பணம் வரவேண்டியதுள்ளது என்று மணிகண்டனிடம், சந்தோஷ்குமார் கேட்டு வந்தார். மேலும் தனியாக தொழில் செய்ததால் சந்தோஷ்குமார் மீது, மணிகண்டன், அவருடைய தம்பிகள் சுதீர் (29), ஸ்ரீஹரி ( 24) ஆகியோர் ஆத்திரத்தில் இருந்துள்ளனர். இந்த நிலையில் சுதீர், ஸ்ரீஹரி ஆகியோர் சந்தோஷ் குமாரை அவரது வீட்டுக்கு வரவழைத்து பணம் தொடர்பாக பேசிக் கொண்டிருந்தார்கள்.அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது.

குத்திக்கொலை

இதில் ஆத்திரமடைந்த சுதீர், ஸ்ரீஹரி ஆகியோர் சந்தோஷ்குமாரை கத்தியால் குத்தியதாக தெரிகிறது. இதில் பலத்த காயம் அடைந்த சந்தோஷ் குமார் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உடனே அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை சந்தோஷ்குமார் இறந்தார். இது குறித்து குனியமுத்தூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து அண்ணன் சுதீர் மற்றும் அவரது தம்பி ஸ்ரீஹரியை கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட சுதீர் டிரைவராக வேலை பார்த்து வருகிறார்.கொலை செய்யப்பட்ட சந்தோஷ் குமாருக்கு சந்தியா என்ற மனைவியும், கவின் (வயது 4) என்று மகனும் உள்ளனர். இந்த கொலை குனியமுத்தூரில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story