அய்யமுத்தன்பட்டியில் களை கட்டிய மீன்பிடி திருவிழா

அய்யமுத்தன்பட்டியில் மீன்பிடி திருவிழா களை கட்டியது
மதுரை
மேலூர்
மேலூர் அருகே அய்யமுத்தன்பட்டியில் உள்ள பூலான்குடி கண்மாயில் மீன்பிடி திருவிழா நேற்று களை கட்டியது. சுற்றி உள்ள கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கணக்கான பேர் மீன்களை பிடிக்க தயாராக கண்மாயை சுற்றி நின்றனர். பாரம்பரிய வழக்கப்படி கிராம பெரியவர்கள் சாமி கும்பிட்டு கண்மாய் கரையில் நின்று வெள்ளை துண்டுகளை கொடி போல அசைத்து மீன்களை பிடிக்க அனுமதி அளித்தனர். அதனை தொடர்ந்து கச்சா, வலை போன்ற மீன்பிடி வலைகளுடன் கண்மாய் தண்ணீரில் சென்று அனைவரும் மகிழ்ச்சியுடன் மீன்களை பிடித்தனர்.இதில் கட்லா, விரால் உள்பட பல்வேறு வகையான மீன்களை பொதுமக்கள் பிடித்து சென்றனர். அவ்வாறு பிடிக்கும் மீன்களை விற்பனை செய்வது தெய்வ குற்றமாக மக்கள் கருதுகின்றனர். வீடுகளில் மீன்களை சமைத்து குடும்பத்தினரும் உறவினர்களும் ஒற்றுமையாக சாப்பிட்டு மகிழ்ந்தனர்.
Related Tags :
Next Story






