திருப்பத்தூர் அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா


திருப்பத்தூர் அருகே கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா
x
தினத்தந்தி 26 Sept 2023 12:15 AM IST (Updated: 26 Sept 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

திருப்பத்தூர் அருகே கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்காக கிராம மக்கள் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.

சிவகங்கை

திருப்பத்தூர்

திருப்பத்தூர் அருகே கண்மாயில் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் ஆயிரக்கணக்காக கிராம மக்கள் பங்கேற்று மீன்களை பிடித்து சென்றனர்.

மீன்பிடி திருவிழா

திருப்பத்தூர் அருகே உள்ளது கண்டவராயன்பட்டி கிராமம். இந்த கிராமத்தில் நல்ல மழை பெய்து விவசாயம் செழிக்க வேண்டி மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதற்காக கடந்த 3 ஆண்டிற்கு முன்னதாகவே இந்த கண்மாயில் 3 ஆயிரம் மீன் குஞ்சுகளை வாங்கி விட்டு கிராம மக்கள் வளர்த்து வந்தனர்.

இதையடுத்து நேற்று முன்தினம் நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் சிவகங்கை மற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த பல்வேறு கிராம மக்கள், சிறுவர்கள், பெண்கள், பெரியவர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு ஆர்வமாக போட்டி போட்டுக்கொண்டு கண்மாயில் இறங்கி மீன்பிடிக்க தொடங்கினர்.

கமகமத்த மீன் குழம்பு

மேலும் ஊத்தா, கச்சா, பரிவலை ஆகியவற்றை கொண்டு மீன்களை மீன்பிடித்தனர்.

இதில் கட்லா, ரோகுமிருகால், சிலேபி, விரால் பாப்பு உள்ளிட்ட வகையான மீன்களை 2 கிலோ முதல் 10 கிலோ வரை பிடித்து சென்றனர்.

இதனால் திருப்பத்தூர் மற்றும் கண்டவராயன்பட்டி பகுதியில் உள்ள வீடுகளில் மீன் குழம்பு வாசனை கமகமத்தது.

1 More update

Next Story