கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா


கண்மாயில் களைகட்டிய மீன்பிடி திருவிழா
x

சோழவந்தான் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் 5 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.

மதுரை

சோழவந்தான் அருகே கண்மாயில் மீன்பிடி திருவிழா நடந்தது. இதில் 5 மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர்.

மீன்பிடி திருவிழா

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்புகோவில் அருகே முதலைகுளம் கண்மாய் உள்ளது. கருப்புகோவிலுக்கு வந்து வேண்டுதல் நிறைவேற்றிய பின்னர் கண்மாயில் மீன் குஞ்சுகளை பக்தர்கள் விட்டுச் செல்வது வழக்கம். 5 மாவட்டங்களில் நடைபெறும் சந்தைகளில் முதலைக்குளம் கண்மாயில் மீன்பிடித் திருவிழா நடைபெறும் என்று ஆண்டுதோறும் அறிவிப்பார்கள்.

இதேபோல் இந்த ஆண்டு நேற்று அதிகாலை மீன்பிடித் திருவிழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, திருச்சி, விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் இருந்து நேற்று முன்தினம் இரவே கருப்பு கோவிலுக்கு வந்திருந்தனர்.

மீன்களை பிடித்தனர்

நேற்று காலை கண்மாய்க்குள் இறங்கி மீன் பிடிக்க தொடங்கினா். இதை ஊராட்சி மன்ற தலைவர் பூங்கொடி பாண்டி தொடங்கி வைத்தார். கண்மாயில் இறங்கி சுமார் 1000-க்கும் மேற்பட்டோர் மீன்பிடிக்க தொடங்கினர். இதனால் விழா களை கட்டியது. விரால், சிலேபி, கட்லா, கெண்டை, ெகளுத்தி உள்பட பல்வேறு மீன்களை அவர்களை பிடித்து மகிழ்ந்தனர்.

இதுகுறித்து பெரியாறு பாசன கூட்டமைப்பு தலைவர் ராமன் கூறுகையில் இத்திருவிழாவை 5 மாவட்டத்திற்கு தெரிவிப்போம். இதன்படி முதல் நாள் இரவே வெளியூரிலிருந்து மீன் பிடிப்பவர்கள் வந்துவிடுவார்கள். அவர்களுக்கு உணவு, தங்கும் வசதி மற்றும் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்து கொடுப்போம் என்றார்.


Next Story