தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை


தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் களைகட்டியது: தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனை
x
தினத்தந்தி 25 Dec 2022 3:49 AM GMT (Updated: 25 Dec 2022 3:51 AM GMT)

தமிழகம் முழுவதும் கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் விழா உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டது.

சென்னை,

கிறிஸ்தவர்களின் பண்டிகையான கிறிஸ்துமஸ் இன்று கொண்டாடப்படுகிறது.

கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று பரவலின் காரணமாக கிறிஸ்துமஸ் பண்டிகையை கிறிஸ்தவர்களால் சிறப்பாக கொண்டாட முடியாத நிலை இருந்தது.

இந்த ஆண்டு கொரோனா பரவல் முற்றிலும் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து கிறிஸ்துமஸ் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் கிறிஸ்தவர்கள் ஈடுபட்டனர்.

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான கிறிஸ்துமஸ் பண்டிகை தமிழகம் முழுவதும் இன்று உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி கிறிஸ்தவர்களின் வீடுகள், ஆலயங்கள் ஆகியவற்றை வண்ண, வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, பலவண்ண, பலவிதமான ஸ்டார்களை தோரணங்களாக அமைத்து, ஏசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் விதமாக சிறிய குடில்கள் முதல் ராட்சத குடில்கள் வரை அமைக்கப்பட்டிருந்தது.

நள்ளிரவு முதலே தேவாலங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமானோர் குடும்பங்களுடன் பங்கேற்றனர்.

இந்தநிலையில் சாந்தோம் தேவாலயத்தில் சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ள கிறிஸ்துவர்கள் ஈடுபட்டனர்.பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்துவர்கள் பங்கேற்று வழிபாடு செய்தனர்.

இதில், ஆயிரக்கணாக்கானோர் புத்தாடை அணிந்து கலந்துகொண்டு ஒருவருக்கொருவா் வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனா். மேலும், கோவை, மதுரை, திருநெல்வேலி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள தேவாலயங்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story