தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா


தகவல் அறியும் உரிமை சட்ட வார விழா
x

கிருஷ்ணகிரியில் தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா மற்றும் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.

கிருஷ்ணகிரி

விழிப்புணர்வு ஊர்வலம்

கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையத்தில் தகவல் அறியும் உரிமை சட்ட வாரவிழா 12-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதையொட்டி விழிப்புணர்வு ஊர்வலம் நடக்கிறது. அதன் ஒருபகுதியாக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. இந்த ஊர்வலத்தை உதவி கலெக்டர் பாபு தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட தீயணைப்பு மற்றும் மீட்பு பணி துறை மகாலிங்கமூர்த்தி, மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் வெங்கடேஷ், விளையாட்டு அலுவலர் மகேஷ்குமார், சமூக நல அலுவலர் விஜயலட்சுமி, தாசில்தார் விஜயகுமார், அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மகேந்திரன் உள்பட 300-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

மஞ்சப்பை விழிப்புணர்வு

புதிய பஸ் நிலையத்தில் தொடங்கிய இந்த ஊர்வலம் ராயக்கோட்டை மேம்பாலம் வழியாக மாவட்ட விளையாட்டு அரங்கில் நிறைவடைந்தது. தொடர்ந்து மஞ்சப்பை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

1 More update

Next Story