வாரச்சந்தையில் ரூ.85 லட்சத்திற்கு


வாரச்சந்தையில் ரூ.85 லட்சத்திற்கு
x

காரிமங்கலம் வாரச்சந்தையில் ரூ.85 லட்சத்திற்கு கால்நடைகள் விற்பனை ஆனது.

தர்மபுரி

காரிமங்கலம்

காரிமங்கலம் வாரச்சந்தை செவ்வாய்க்கிழமை தோறும் நடந்து வருகிறது. இதில் சுற்று வட்டார பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தங்களது கால்நடைகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். நேற்று நடந்த சந்தையில் சுமார் 650 மாடுகள், 750 ஆடுகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதில் ரூ.50 லட்சத்திற்கு ஆடுகளும், ரூ.30 லட்சத்திற்கு மாடுகளும் விற்பனையானது. ரூ.5 லட்சத்திற்கு நாட்டுக்கோழி விற்பனை நடந்தது. கடந்த வாரத்தை காட்டிலும் கால்நடை வரத்து அதிகரித்து காணப்பட்ட நிலையில் ரம்ஜான் பண்டிகை வருவதை முன்னிட்டு ஆடுகள் விற்பனை அதிகரித்து உள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

1 More update

Next Story