தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா


தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா
x

தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது.

பெரம்பலூர்

பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் கல்லூரியில் புதிதாக சேர்ந்துள்ள, முதலாமாண்டு மாணவர்களை வரவேற்கும் விழா நடைபெற்றது. விழாவுக்கு தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வேந்தர் அ.சீனிவாசன் தலைமை தாங்கினார். தனலட்சுமி சீனிவாசன் கல்வி அறக்கட்டளையின் உறுப்பினர் பூபதி முன்னிலை வகித்தார். விழாவில் பல்கலைக்கழக வேந்தர் சீனிவாசன் பேசும்போது கூறியதாவது:-

கல்லூரி வாழ்க்கை என்பது வெறும் வகுப்பறைகள் மற்றும் பாடப்புத்தகங்களை மட்டும் சார்ந்தது இல்லை என்பதை புரிந்து கொள்ளவேண்டும். கல்லூரியானது உங்களுடைய பலதரப்பட்ட திறன்களை வளர்த்துக்கொள்ளும் இடம், வாழ்நாள் முழுவதும் தொடரக்கூடிய உண்மையான நட்புகள் மலரும் இடம். பேராசிரியர்களிடம் இருந்து கற்றுக் கொள்வது போல் சக நண்பர்களிடமிருந்தும் பல நல்ல பண்புகளை கற்றுக்கொள்ளும் இடம் என்பதை அறிந்து, வாய்ப்புகளை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கல்வி என்பது அறிவைப் பெறுவது மட்டுமல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். இது உங்களின் முழுமையான ஆளுமையை வளர்ப்பதற்கான ஒரு சக்தி வாய்ந்த ஆயுதமாகும். உங்கள் தொழில்நுட்ப திறன்களுடன் சேர்த்து, உணர்வுகளை கையாளும் திறன், முடிவெடுக்கும் திறன் போன்ற திறன்களையும் வளர்த்துக்கொள்ளுங்கள். இவ்வாறு அவர் கூறினா்.

இதையடுத்து, தமிழ் பேச்சாளர் பாரதி பாஸ்கர் பேசுகையில் உலகத்தில் உள்ள அனைத்து பொருட்களின் தயாரிப்பு மற்றும் இயக்கத்ததிற்கு பொறியியல் துறைதான் மிக முக்கிய காரணமாகும். மேலும் பொறியியல் பயிலும் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பது மிக்க மகிழ்ச்சி தரும் செயல் என்றும் மாணவர்கள் தங்களுக்கு கிடைக்கும் வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி, சந்திரயான்-3 திட்ட இயக்குனர் வீர முத்துவேலை போல தங்கள் துறைகளில் மிக உயர்ந்த இடத்தை அடைய வேண்டும் என்றார்.

இதனைதொடர்ந்து தனலட்சுமி சீனிவாசன் கல்வி நிறுவனங்களின், உயர்கல்விக்கான திட்டமிடல் மற்றும் மேம்பாட்டு இயக்குனர் நந்தகுமார், கல்லூரியின் முதல்வர் இளங்கோவன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.

விழாவில் தனலட்சுமி சீனிவாசன் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் முதல்வர் உமாதேவி பொங்கியா, பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் பல்கலைக்கழக வளாகத்தின் ஸ்கூல் ஆப் என்ஜினீயரிங் புலமுதல்வர் ஸ்ரீதேவி, திறன் மேம்பாட்டு அதிகாரி சஷீதா, புலமுதல்வர் (ஆராய்ச்சி ) சிவராமன், துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளா உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிருந்து, முதலாம் ஆண்டில் சேர்ந்துள்ள 1,500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக புலமுதல்வர் (அகாடெமிக்) அன்பரசன் வரவேற்றார். முடிவில் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் வேல்முருகன் நன்றி கூறினார்.


Next Story