மத்திய பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு வரவேற்பு


மத்திய பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு வரவேற்பு
x

பள்ளிகொண்டாவுக்கு வந்த மத்திய பாதுகாப்பு படை வீராங்கனைகளுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

வேலூர்

மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவின்பேரில் பெண்கள் முன்னேற்றம் தொடர்பாக மத்திய பாதுகாப்புப்படை வீராங்கனைகள் கடந்த 3-ந் தேதி கன்னியாகுமரியில் இருந்து குஜராத் வரை மோட்டார் சைக்கிள் பயணத்தை தொடங்கினர். அவர்கள் பள்ளிகொண்டாவுக்கு வந்தனர்.

அவர்களுக்கு பள்ளிகொண்டா அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் சார்பில் தேசிய கொடி ஏந்தியும், பூக்கள் தூவியும் வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளிகெண்டா பேருராட்சி மன்ற தலைவர் சுப பிரியாகுமரன் மோட்டார்சைக்கிள் பயணத்தை தொடங்கி வைத்தார். இன்ஸ்பெக்டர் கருணாகரன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் வசீம்அக்ரம் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள், காவல் துறையினர் என பலர் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story