முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு
அய்யலூர் ஆர்.வி.எஸ். குமரன் கலை அறிவியல் கல்லூரியில் வேதியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது.
திண்டுக்கல்
அய்யலூர் ஆர்.வி.எஸ். குமரன் கலை அறிவியல் கல்லூரியில் வேதியல் துறை சார்பில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு வரவேற்பு விழா நடந்தது. இதற்கு கல்லூரி முதல்வர் திருமாறன் தலைமை தாங்கினார். வேதியல் துறை தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார். கல்லூரி மாணவர் சவுந்தரம் வரவேற்றார். அதனைத்தொடர்ந்து புதிய மாணவர்களின் கல்வி ஆர்வத்தை தூண்டும் வகையில் போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. இந்த விழாவை 3-ம் ஆண்டு மாணவி துர்கா தொகுத்து வழங்கினார். விழா முடிவில் 2-ம் ஆண்டு மாணவி தாரணி நன்றி கூறினார்.
Related Tags :
Next Story