தூத்துக்குடி-மும்பை ரெயிலுக்கு கும்பகோணத்தில் வரவேற்பு
தூத்துக்குடி-மும்பை ரெயிலுக்கு கும்பகோணத்தில் வரவேற்பு
மும்பை சத்ரபதி சிவாஜி மகராஜ் முனையத்திலிருந்து புனே, ரேணிகுண்டா, திருத்தணி, காஞ்சீபுரம், சிதம்பரம், கும்பகோணம், பாபநாசம், தஞ்சாவூர், மதுரை வழியாக தூத்துக்குடிக்கு புதிய ெரயிலை மத்திய ெரயில்வே அமைச்சகம் அறிவித்தது. இந்த ரயில் மும்பையில் இருந்து புறப்பட்டு தூத்துக்குடி வந்தடைந்தது. நேற்று காலை தூத்துக்குடியிலிருந்து புறப்பட்டு மாலை 5.10 மணிக்கு கும்பகோணம் ெரயில்வே நிலையம் வந்தடைந்தது. கும்பகோணம் வந்த ெரயிலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் ராமலிங்கம் எம்.பி. கலந்துகொண்டு ெரயில் டிரைவர்கள் மனோகரன், சுகன், ெரயில்வே மேலாளர் சேரன் மற்றும் ரெயில் பயணிகளுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கினார். இதில் பா.ஜ.க. வடக்கு மாவட்டத்தலைவர் சதீஷ், கும்பகோணம் அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் சோழா சி.மகேந்திரன், செயலாளர் சத்யநாராயணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.