மதுரை-குருவாயூர் ரெயிலுக்கு வரவேற்பு


மதுரை-குருவாயூர் ரெயிலுக்கு வரவேற்பு
x

சிவகாசி, ராஜபாளையத்தில் மதுரை-குருவாயூர் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

விருதுநகர்

சிவகாசி,

சிவகாசி, ராஜபாளையத்தில் மதுரை-குருவாயூர் ரெயிலுக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

சிவகாசி

மதுரையில் இருந்து சிவகாசி, ராஜபாளையம், தென்காசி வழியாக குருவாயூருக்கு ரெயில் இயக்கப்படும் என்று கடந்த சில நாட்களுக்கு முன்னர் தென்னக ரெயில்வே அறிவித்தது.

இந்தநிலையில் நேற்று மதியம் சிவகாசி ரெயில் நிலையம் வந்த குருவாயூர் ரெயிலுக்கு சிவகாசி மாநகர ரெயில் உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் நிர்வாகிகள் சுரேஷ்தர்கர், ஆடிட்டர் கிரிதர், பன்னீர்செல்வம், அரவிந்தன், பிரகாஷ், முருகேசன், புவன் ஆகியோர் கலந்து கொண்டனர். ரெயிலின் முன்புறத்தில் பிரம்மாண்ட மாலை அணிவிக்கப்பட்டது. ரெயில் டிரைவர், டிக்கெட் பரிசோதகர் உள்ளிட்டவர்களுக்கு சால்வை அணிவித்து இனிப்பு வழங்கப்பட்டது.

ராஜபாளையம்

அதேபோல ராஜபாளையத்திற்கு வந்த இந்த ரெயிலுக்கு ரெயில் பயனாளர்கள் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள், பா.ஜ.க., காங்கிரஸ், தமிழ்மாநில காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர் ரெயிலுக்கு மாலை அணிவித்து வரவேற்றனர்.

மேலும் ரெயில் ஓட்டுனர்களுக்கு பொன்னாடை அணிவித்தும், இனிப்பு வழங்கியும் பயனாளர்கள் சங்கத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர்.


Next Story