ஆசிரியர் கூட்டணியின் ரத யாத்திரைக்கு வரவேற்பு
மயிலாடுதுறைக்கு வந்த ஆசிரியர் கூட்டணியின் ரத யாத்திரைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
மயிலாடுதுறை
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி அகில இந்திய ஆசிரியர் கூட்டணி மற்றும் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் கன்னியாகுமரியில் தொடங்கி டெல்லி வரை நாடு தழுவிய ரத யாத்திரை தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 5-ந் தேதி கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த ரத யாத்திரை நாகையில் இருந்து நேற்று காலை மயிலாடுதுறைக்கு வந்தடைந்தது. மயிலாடுதுறை நகராட்சி அலுவலகம் பகுதிக்கு வந்த ரத யாத்திரையை தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சங்கத்தினர் வரவேற்றனர். இந்த ரத யாத்திரையில், அகில இந்திய ஆசிரியர் கூட்டணிபொருளாளர் ஹரி கோவிந்தன், இணை பொதுச்செயலாளர் ரங்கராஜன், செயல் தலைவர் பசவராஜ் குரிக்கர் உள்பட அகில இந்திய மற்றும் மாநில பொறுப்பாளர்கள் கலந்து கொண்டு கோரிக்கையை விளக்கி பேசினர்.
Related Tags :
Next Story