செங்கோட்டை- தாம்பரம் ரெயிலுக்கு பாவூர்சத்திரத்தில் வரவேற்பு
செங்கோட்டை- தாம்பரம் ரெயிலுக்கு பாவூர்சத்திரத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
பாவூர்சத்திரம்:
செங்கோட்டையில் இருந்து பாவூர்சத்திரம், அம்பை, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு புதிய ரெயில் இயக்கப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து புறப்பட்ட இந்த ெரயிலுக்கு பாவூர்சத்திரம் ரெயில் நிலையத்தில் ெரயில் பயணிகள், பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. ெரயில் என்ஜின் டிரைவர்களுக்கு சால்வை, மரக்கன்றுகள் மற்றும் தோரணமலை முருகன் கோவில் பிரசாதம் வழங்கப்பட்டது,
பாவூர்சத்திரம் ெரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஞானதிரவியம் எம்.பி. கொடியசைத்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ், கீழப்பாவூர் யூனியன் தலைவி சீ.காவேரி, ஒன்றிய தி.மு.க. செயலாளர் சீனித்துரை, கீழப்பாவூர் பேரூராட்சி தலைவர் ராஜன், தொழிலதிபர் சேவியர் ராஜன், மாவட்ட கவுன்சிலர்கள் சாக்ரடீஸ், சுப்பிரமணியன், ஒன்றிய கவுன்சிலர் ராம.உதயசூரியன், பஞ்சாயத்து தலைவர்கள் ராஜ்குமார், முத்துமாலையம்மாள், பாவூர்சத்திரம் வணிகர்கள் சங்க தலைவர் பாலசுப்பிரமணியன், செயலாளர் விஜய்சிங்ராஜ், பொருளாளர் ஆரோக்கியராஜ், காமராஜர் தினசரி மார்க்கெட் சங்க நிர்வாகி நாராயணசிங்கம், ெரயில்வே ஆலோசனைக்குழு உறுப்பினர் பாண்டியராஜன், தளிர் அமைப்பின் தங்கராஜ் உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
முன்னதாக இந்த ெரயிலுக்கு கடையம் ெரயில் நிலையத்தில் நிறுத்தம் பெற்றுத்தர வேண்டி ஞானதிரவியம் எம்.பி.யிடம் தோரணமலை முருக பக்தர்கள் குழுவினர் மனு அளித்தனர்.