ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை தமிழக அரசே அகற்றும் முடிவுக்கு வரவேற்பு


ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை தமிழக அரசே அகற்றும் முடிவுக்கு வரவேற்பு
x

ஸ்டெர்லைட் ஆலையில் கழிவுகளை தமிழக அரசே அகற்றும் முடிவு வரவேற்க படுகிறது என்று அமைச்சர் மெய்யநாதன் கூறினார்.

புதுக்கோட்டை

புதுக்கோட்டையில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் உள்ள கழிவுகளை அகற்றுவதற்கு தங்களை அனுமதிக்க வேண்டும் என அந்த ஆலையின் நிர்வாகம் அனுமதி கேட்டார்கள். ஆனால் தமிழக அரசே அந்த கழிவுகளை அகற்றும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரலாற்று சிறப்புமிக்க முடிவினை மேற்கொண்டிருக்கிறார். அந்த அடிப்படையில் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், பொதுமக்கள் வரவேற்று பாராட்டுகளையும், நன்றியையும் தெரிவித்து கொண்டிருக்கிறார்கள். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் கழிவுகளை அகற்ற வேண்டும் என மத்திய அரசுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள கழிவுகளை மத்திய அரசு தான் அகற்ற வேண்டும். மீண்டும் மஞ்சப்பை திட்டம் மூலம் மக்களிடையே துணிப்பை பயன்படுத்துவது 25 சதவீதம் அதிகரித்துள்ளது. ஆனாலும் ஆங்காங்கே ஒரு சில இடங்களில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு உள்ளது. இதனையும் கட்டுக்குள் கொண்டு வருவோம். புதுக்கோட்டை மாவட்டத்தில் காவிரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டம் திட்டமிட்டப்படியே நடைபெறும். இவ்வாறு அவர் கூறினார்.


Next Story