ஆசிய ஆக்கி கோப்பைக்கு வரவேற்பு


ஆசிய ஆக்கி கோப்பைக்கு வரவேற்பு
x

அம்பையில் ஆசிய ஆக்கி கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

திருநெல்வேலி

அம்பை:

தேசிய ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் 2023 போட்டி சென்னையில் வருகிற 3-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை நடக்கிறது. இதை பிரபலப்படுத்தும் வகையில், ஆசிய ஆக்கி கோப்பையை அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லும் சுற்றுப்பயணம் கன்னியாகுமரியில் இருந்து புறப்பட்டு தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகிறது.

இந்த கோப்பை அம்பைக்கு வந்ததையொட்டி வேல்ஸ் வித்யாலயா மேல்நிலைப்பள்ளியில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகம்மது சபீர் ஆலம், தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் வக்கீல் பிரபாகரன், அம்பை நகர்மன்ற தலைவர் பிரபாகர பாண்டியன், யூனியன் தலைவர் பரணி சேகர், விக்கிரமசிங்கபுரம் நகர்மன்ற தலைவர் செல்வ சுரேஷ் பெருமாள், நகர தி.மு.க. செயலாளர் கணேசன், சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன், இந்திய ஆக்கி அணி சம்மேன பொருளாளர் சேகர் மனோகரன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கோப்பையை மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தினர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை பள்ளி தாளாளர் வீரவேல் முருகன், இயக்குனர் ராஜ ராஜேஸ்வரி, செயல் இயக்குனர் சிவராஜ் பாண்டியன், பள்ளி முதல்வர் சக்திவேல் முருகன் ஆகியோர் செய்திருந்தனர். இதில் அம்பை நகராட்சி துணைத்தலைவர் சிவசுப்பிரமணியன், நகராட்சி உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story