ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பைக்கு வரவேற்பு


ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பைக்கு வரவேற்பு
x

சங்கரன்கோவிலில் ஆசிய ஆக்கி சாம்பியன்ஷிப் கோப்பைக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

தென்காசி

சங்கரன்கோவில்:

தென்காசி மாவட்ட இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அலுவலகம் சார்பில் சங்கரன்கோவில் கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் சென்னையில் நடைபெற உள்ள ஆசிய ஆண்கள் ஆக்கி சாம்பியன்ஷிப் போட்டிக்கான கோப்பைக்கு வரவேற்பு விழா நடந்தது. தென்காசி மாவட்ட கலெக்டர் துரை ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் வினு வரவேற்றார். உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ராமசுப்பிரமணியன் தொகுத்து வழங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாம்சன் சிறப்புரை ஆற்றினார்.

ஆக்கி கோப்பையினை அறிமுகப்படுத்தி தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. பேசினார்.

தொடர்ந்து தென்காசி எம்.பி. தனுஷ் குமார், வாசுதேவநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் சதன் திருமலை குமார், தென்காசி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்ச்செல்வி, சங்கரன்கோவில் நகராட்சி தலைவி உமா மகேஸ்வரி, சங்கரன்கோவில் யூனியன் தலைவர் லாலா சங்கரபாண்டியன், ஆக்கி யூனிட் ஆப் தென்காசி அமைப்பின் தலைவர் கல்யாணி சுந்தரம், கோமதி அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் பழனிச்செல்வம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். தொடர்ந்து தென்காசி மாவட்டத்திற்கு வந்த கோப்பைக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

1 More update

Next Story