விபத்தில் வெல்டிங் கடை ஊழியர் பலி
கிருஷ்ணகிரி
மத்திகிரி:-
ஓசூர் சீதாராம் நகரை சேர்ந்தவர் சதாம் (வயது 22). வெல்டிங் கடை ஊழியர். கடந்த 21-ந் தேதி இரவு இவரும், ஏரி தெரு கிருஷ்ணா (19), ராஜகணபதி நகர் அர்ஜூன் (23) ஆகிய 3 பேரும் ஒரு மோட்டார்சைக்கிளில் ஓசூர்- கெலமங்கலம் சாலை அச்செட்டிப்பள்ளி ஆஞ்சநேயர் கோவில் அருகில் வந்து கொண்டிருந்தனர்.
அப்போது எதிர்பாராதவிதமாக நிலைதடுமாறிய மோட்டார்சைக்கிள் சாலையில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் படுகாயம் அடைந்த சதாம் சம்பவ இடத்திலேயே இறந்தார். கிருஷ்ணா, அர்ஜூன் ஆகிய 2 பேரும் படுகாயமடைந்தனர். அவர்களை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இந்த விபத்து குறித்து மத்திகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story