வெல்டிங் தொழிலாளி தற்கொலை


வெல்டிங் தொழிலாளி தற்கொலை
x

வெல்டிங் தொழிலாளி தற்கொலை

கோயம்புத்தூர்

கணபதி

கோவை இரத்தினபுரி சாஸ்திரி ரோட்டிடைச் சேர்ந்தவர் விஜய் சுரேந்திரன் (வயது43). வெல்டிங் தொழிலாளி.இவர் கடந்த 1 மாதத்திற்கு முன்பு வேலை செய்து கொண்டிருக்கும் போது விபத்து ஏற்பட்டு பலத்த காயமடைந்தார்.இதனால் அவரால் தொடர்ந்து வேலைக்கு செல்ல இயலவில்லை.

இதனால் குடும்பத்தில் போதிய வருமானம் இல்லாமல் மனவேதனையடைந்த விஜய்சுரேந்தின் நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாதபோது தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து ரத்தினபுரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story