மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி பலி
சர்க்கரை ஆலையில் மின்சாரம் பாய்ந்து வெல்டிங் தொழிலாளி பலியானார்.
அரியலூர்
வேப்பந்தட்டை அருகே தனியார் சர்க்கரை ஆலை இயங்கி வருகிறது. இந்த ஆலையில் கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே உள்ள பெலாந்துறை கிராமத்தை சேர்ந்த ஜெயப்பெருமாள் மகன் ஜெயசூர்யா (வயது 26) என்பவர் ஒப்பந்த அடிப்படையில் வெல்டராக பணிபுரிந்து வந்துள்ளார்.
நேற்று சர்க்கரை தயாரிக்கும் பாய்லரின் மேல் பகுதியில் வெல்டிங் பணியில் ஜெயசூர்யா ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே ஜெயசூர்யா பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரும்பாவூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story