வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி


வெல்டிங் பட்டறை உரிமையாளர் பலி
x

மின்சாரம் பாய்ந்து வெல்டிங் பட்டறை உரிமையாளர் பரிதாபமாக இறந்தார்.

திண்டுக்கல்

திண்டுக்கல் அனுமந்தநகரை சேர்ந்தவர் ராமராஜ் என்ற தர்மர் (வயது 60). இவர், வேடப்பட்டி அபிராமி நகரில் வெல்டிங் பட்டறை வைத்துள்ளார். நேற்று மாலை இவர், பட்டறையில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story