கொங்கரப்பட்டி மக்கள் தொடர்பு திட்ட முகாம்:204 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினர்


கொங்கரப்பட்டி மக்கள் தொடர்பு திட்ட முகாம்:204 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்கலெக்டர் சாந்தி வழங்கினர்
x

கொங்கரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

தர்மபுரி

மொரப்பூர்

கொங்கரப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத்திட்ட முகாமில் 204 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார்.

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

காரிமங்கலம் தாலுகா கொங்கரப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்புத்திட்ட முகாம் நடந்தது. முகாமுக்கு மாவட்ட கலெக்டர் சாந்தி தலைமை தாங்கினார். சம்பத்குமார் எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சி குழு தலைவர் யசோதா மதிவாணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். உதவி கலெக்டர் கீதா ராணி வரவேற்றார். முகாமில் பொதுமக்கன் கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்ரிடம் மனு கொடுத்தனர்.

முகாமில் கலெக்டர் சாந்தி பேசுகையில், கொங்கரபட்டி கிராமத்தில் மொத்தம் 6,000 பேர் உள்ளனர். இந்த கிராமத்திற்கு அங்கன்வாடி மையம், குடிநீர்வசதி, கழிப்பறை வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டு உள்ளது. இந்த முகாமில் வழங்கப்பட்டுள்ள மனுக்கள் மற்றும் ஏற்கெனவே பரிசீலனையில் உள்ள மனுக்கள் கள ஆய்வு செய்து தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கப்படும். தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் முழுமையாக அறிந்து பயன்பெற வேண்டும் என்று கூறினார்.

நலத்திட்ட உதவிகள்

இந்த முகாமில் இலவச வீட்டுமனை பட்டாக்கள், பட்டா மாறுதல்கள், ஆதரவற்ற விதவை மற்றும் இருளர் இன சான்றிதழ்கள, மாற்றுத்திறனாளி, முதியோர் உதவித்தொகை, தொகுப்பு வீடுகள், மகளிர் சுய உதவிக்குழு கடன் உதவிகள் என பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 204 பயனாளிகளுக்கு ரூ.2.55 கோடி மதிப்புள்ள பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் சாந்தி வழங்கினார். முன்னதாக பல்வேறு துறைகளின் சார்பில் அமைக்கப்பட்டு இருந்த கண்காட்சி அரங்குகளை கலெக்டர் பார்வையிட்டார்.

முகாமில் கால்நடை பராமரிப்பு துறை இணை இயக்குனர் சுவாமிநாதன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் சாகுல் அமீத், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி, மாவட்ட கவுன்சிலர் தனபால், மொரப்பூர் ஒன்றியக்குழு தலைவர் சுமதி செங்கண்ணன், ஒன்றிய கவுன்சிலர் அம்பிகா, ஊராட்சி மன்றத்தலைவர் செல்வம், துணைத்தலைவர் மங்கம்மாள், தாசில்தார் ரமேஷ், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சசிகலா, ரங்கராஜன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Next Story