மக்கள் தொடர்பு திட்ட முகாமில்ரூ.97½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


மக்கள் தொடர்பு திட்ட முகாமில்ரூ.97½ லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

பருத்திப்பள்ளி கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு திட்ட முகாமில் 509 பயனாளிகளுக்கு ரூ.97 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் உமா வழங்கினார்.

நாமக்கல்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு தாலுகா பருத்திப்பள்ளி கிராமத்தில் நேற்று மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு கலெக்டர் உமா தலைமை தாங்கினார். சின்ராஜ் எம்.பி., ஈஸ்வரன் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இம்முகாமில் வருவாய் துறையின் சார்பில் ரூ.47.56 லட்சம் மதிப்பில் 136 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டா, 28 பயனாளிகளுக்கு தனிப்பட்டா, ரூ.7 லட்சம் மதிப்பில் 48 பயனாளிகளுக்கு உதவித்தொகை, வேளாண்மைத் துறையின் சார்பில் ரூ.3 லட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் 10 விவசாயிகளுக்கு நலத்திட்ட உதவிகள், கூட்டுறவுத்துறையின் சார்பில் ரூ.5.95 லட்சம் மதிப்பில் 7 பயனாளிகளுக்கு பயிர் கடன்உதவி உள்பட 509 பயனாளிகளுக்கு 97½ லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும், ரூ.61 லட்சம் மதிப்பீட்டில் 2 புதிய திட்டப்பணிகளுக்கு நிர்வாக அனுமதியினையும் கலெக்டர் உமா வழங்கினார்.

கண்காட்சி அரங்குகள்

முன்னதாக வேளாண் பொறியியல் துறை, வேளாண்மைத்துறை, தோட்டக்கலைத் துறை, கால்நடை பராமரிப்பு துறை, பட்டுவளர்ச்சி துறை, சமூக நலத்துறை, தாட்கோ, வருவாய்த்துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட துறை உள்ளிட்ட அரசு துறைகளில் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு இருந்ததை கலெக்டர் பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், கூட்டுறவு சங்கங்கள் இணைபதிவாளர் செல்வகுமரன், திருச்செங்கோடு உதவி கலெக்டர் சுகந்தி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத்திட்டம்) பிரபாகரன், மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் முத்துராமலிங்கம், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் முருகேசன், கால்நடை பராமரிப்புத்துறை இணை இயக்குனர் (பொறுப்பு) நடராஜன், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் கணேசன், தாட்கோ மாவட்ட மேலாளர் ராமசாமி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story