தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி நிறைவு: 163 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்

தேன்கனிக்கோட்டையில் ஜமாபந்தி நிறைவு:  163 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்  கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்
x

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 163 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரி

தேன்கனிக்கோட்டை:

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 163 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சம் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

ஜமாபந்தி நிறைவு விழா

தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு விழா நடந்தது. இதில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மக்களை பெற்று கொண்டார். இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து 163 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 12 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

அப்போது கலெக்டர் பேசுகையில், தேன்கனிக்கோட்டை தாலுகா அலுவலகத்தில் நடந்த ஜமாபந்தியில் மொத்தம் ஆயிரத்து 661 மனுக்கள் பெறப்பட்டன. அதில் 226 மனுக்களுக்கு உடனடி தீர்வு காணப்பட்டது. 53 மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. மீதமுள்ள 1,382 மனுக்கள் மீது உரிய விசாரணை நடத்தி தீர்வு காணப்படும் என்றார்.

ஆய்வு

தளி உள்வட்டத்திற்கு உட்பட்ட 10 கிராம கணக்கு பதிவேடுகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதில் நில அளவை உதவி இயக்குனர் சேகரன், கலெக்டரின் அலுவலக மேலாளர் சண்முகம், தாசில்தார் குருநாதன், சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் கோபிநாத், வட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story