46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

கிருஷ்ணகிரி

கிருஷ்ணகிரியில் நடந்த பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில் 46 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி வழங்கினார்.

குறை தீர்க்கும் கூட்டம்

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி தலைமை தாங்கினார். இதில் பொதுமக்கள் தையல் எந்திரங்கள், உதவி தொகைகள், சாலை வசதி, மின்சார வசதி உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 307 மனுக்களை கலெக்டரிடம் வழங்கினார்கள்.

மனுக்களை பெற்று கொண்ட கலெக்டர் அதன் மீது விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். தொடர்ந்து, தமிழ் வளர்ச்சித்துறை சார்பாக அம்பேத்கர் பிறந்தநாளையொட்டி, நடைபெற்ற பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் 6 பேருக்கு காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை வழங்கினார்.

நலத்திட்ட உதவிகள்

தொடர்ந்து 46 பயனாளிகளுக்கு திருமண உதவித்தொகை உள்பட மொத்தம் ரூ.7 லட்சத்து 19 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார். மேலும் தேன்கனிக்கோட்டை தாலுகா பிதிரெட்டிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி மஞ்சுளாவுக்கு மாதாந்திர உதவித்தொகை பெறுவதற்கான ஆணையை கலெக்டர் வழங்கினார்.

இந்த கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஸ்வரி, தனித்துணை கலெக்டர் (சமூக பாதுகாப்பு திட்டம்) பாக்கியலட்சுமி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் அமீர்பாஷா, தமிழ் வளர்ச்சித்துறை உதவி ஆணையர் பவாணி, மாற்றுத்திறனாளி நலத்துறை அலுவலர் செண்பகவள்ளி உள்பட துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story