பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x
தினத்தந்தி 14 Dec 2022 6:45 PM GMT (Updated: 14 Dec 2022 6:45 PM GMT)

அ.நெடுங்குளம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

சிவகங்கை

இளையான்குடி,

அ.நெடுங்குளம் கிராமத்தில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில் பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

மக்கள் தொடர்பு முகாம்

இளையான்குடி அருகே உள்ள அ.நெடுங்குளம் கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. முகாமில் அரசின் பல்வேறு திட்டங்கள் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. அரசின் திட்டங்களை அறிந்து உரிய முறையில் அரசு அதிகாரிகளை அணுகி பயன் பெற்று தங்களின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என கலெக்டர் மதுசூதன் ரெட்டி கேட்டுக்கொண்டார்.

இதையொட்டி மொத்தம் 194 பயனாளிகளுக்கு ரூ.30 லட்சத்து 92 ஆயிரம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

கலந்து கொண்டவர்கள்

நிகழ்ச்சியில் சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சமூக பாதுகாப்பு திட்டம் தனி கலெக்டர் காமாட்சி, வேளாண்மை துறை இயக்குனர் தனபாலன், கால்நடை பராமரிப்புத்துறை துணை இயக்குனர் நாகநாதன், சுகாதார இயக்குனர் விஜய் சந்திரன், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலர் ரத்தினவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேலு, மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் தனலட்சுமி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மங்களநாதன், தாட்கோ மேலாளர் முத்துச்செல்வி, மாவட்ட சமூக நல அலுவலர் அன்பு குளோரியா, அ.நெடுங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் நதியா, இளையான்குடி தாசில்தார் அசோக்குமார் மற்றும் இளையான்குடி வட்டார வளர்ச்சி அலுவலர் ஊர்க்காவலன், சாந்தி மற்றும் அரசு துறை அலுவலர்கள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story