நலத்திட்ட உதவிகள்
நலத்திட்ட உதவிகள்
ராமநாதபுரத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் கலெக்டர் ஜானிடாம் வர்கீஸ் தலைமையில் நடைபெற்றது. இதில் 235 பேர் தங்கள் குறைகள் கோரிக்கைகள் குறித்து கலெக்டரிடம் மனு அளித்தனர். அந்த மனுக்களின் மீது உடனே நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். இந்த கூட்டத்தில் முத்ரா திட்டத்தில் திருவாடானை பகுதியை சேர்ந்த 7 நரிக்குறவர்களுக்கு சுயதொழில் தொடங்க தலா ரூ.25 ஆயிரத்துக்கான காசோலைகளை வழங்கினார்.
ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் ரூ.2.25 லட்சத்தில் 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனை பட்டாக்களையும், 3 பயனாளிகளுக்கு தலா ரூ.7 ஆயிரம் மதிப்பீட்டில் இலவச தையல் எந்திரங்களையும் வழங்கினார். மொத்தம் 20 பேருக்கு ரூ.4.21 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் காமாட்சி கணேசன், துணை கலெக்டர் குணசேகரன், முன்னோடி வங்கி மேலாளர் சந்திரசேகரன், ஆதிதிராவிடர் நல அலுவலர் அன்னம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.