ரூ.23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்


ரூ.23 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
x

நாமக்கல் கலெக்டர் அலுவலகத்தில் ரூ.23 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல்

நலத்திட்ட உதவிகள்

நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், தலா ரூ.83,500 மதிப்பில் 3 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர பெட்ரோல் ஸ்கூட்டர்களும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தலா ரூ.9,050 மதிப்பில் 5 மாற்றுத்திறனாளிகளுக்கு மூன்று சக்கர வண்டிகளும், தலா ரூ.6,840 மதிப்பில் 4 மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் எந்திரம் என மொத்தம் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 23 ஆயிரத்து 110 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

இதேபோல் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறையின் சார்பில் பணியிடத்தில் விபத்து மரணம் அடைந்த தொழிலாளர்களின் வாரிசுதாரர்களுக்கு தலா ரூ.5 லட்சம் வீதம் 4 நபர்களுக்கு விபத்து உதவித்தொகைக்கான வங்கி பரிமாற்ற ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியும் நடந்தது. மொத்தமாக 16 பயனாளிகளுக்கு ரூ.23 லட்சத்து 23 ஆயிரத்து 110 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஸ்ரேயாசிங், ராஜேஸ்குமார் எம்.பி. ஆகியோர் வழங்கினர்.

குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னதாக நடைபெற்ற மக்கள் குறைத்தீர்க்கும் நாள் கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கேட்டு மொத்தம் 293 மனுக்களை பொதுமக்கள் கலெக்டரிடம் வழங்கினர். அவற்றை உரிய அலுவலர்களிடம் வழங்கி அவற்றின் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். பின்னர் கலெக்டர் அலுவலக தரை தளத்தில் மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்த கலெக்டர் கோரிக்கை மனுக்களை பெற்று, துறை அலுவலரிடம் வழங்கி நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுலவர் மணிமேகலை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சிவக்குமார், முன்னாள் எம்.பி. பி.ஆர்.சுந்தரம், நாமக்கல் நகர் மன்ற தலைவர் கலாநிதி மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

1 More update

Next Story