மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.38 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள்
61 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வழங்கினார்.
சிவகங்கை
61 மாற்றுதிறனாளிகளுக்கு ரூ.38 லட்சத்து 36 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் வழங்கினார்.
நலத்திட்ட உதவிகள்
சிவகங்கை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் நடைபெற்றது. விழாவில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் கதிர்வேல் வரவேற்று பேசினார். விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கி கூட்டுறவு துறை அமைச்சர் கே.ஆர்.பெரிய கருப்பன் பேசியதாவது:- கடுமையான நிதி நெருக்கடிகள் இருந்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு முதல்-அமைச்சர் தேவையான உதவிகளை செய்து வருகிறார்.
உங்கள் தேவைகளை கூறினால் உடனடியாக தீர்த்து வைக்கிறார். சிவகங்கை மாவட்டத்தில் 22 ஆயிரத்து 708 மாற்றுத்திறனாளிகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2022-2023-ம் நிதி ஆண்டில் இந்த மாவட்டத்தில் ரூ.13 கோடியே 58 லட்சத்து 2165 நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சியில் 61 பேருக்கு ரூ.38 லட்சத்து 36 ஆயிரத்து 399 மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து நலத்திட்ட உதவிகளை அமைச்சர் வழங்கினார்.
கண்காட்சி
விழாவில் மாவட்ட தி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணி முத்து, சிவகங்கை நகரசபை தலைவர் துரை ஆனந்த், துணை தலைவர் கார் கண்ணன், மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் புஷ்பராஜ், சிவகங்கை ஊராட்சி ஒன்றிய தலைவர் மஞ்சுளா பாலச்சந்தர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆரோக்கிய சாந்தா ராணி, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் பவானி கணேசன் உள்பட கலந்து கொண்டனர்.
தொடர்ந்து சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு செய்தி மக்கள் தொடர்பு துறை மூலமாக அமைக்கப்பட்டிருந்த தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை அமைச்சர் திறந்து வைத்தார்.