ரூ.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
விருதுநகரில் தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி 1053 பயணிகளுக்குரூ ரூ.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
விருதுநகர்
விருதுநகரில் தி.மு.க. அரசின் 2-ம் ஆண்டு நிறைவையொட்டி 1053 பயணிகளுக்குரூ ரூ.91 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் வழங்கினர்.
நலத்திட்ட உதவி
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு 2 ஆண்டு நிறைவையொட்டி விருதுநகர் மருத்துவக் கல்லூரி அரங்கில் கலெக்டர் ஜெயசீலன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன் மற்றும் தங்கம் தென்னரசு ஆகியோர் கலந்து கொண்டு 1053 பயனாளிகளுக்கு ரூ.91 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினர். நலத்திட்ட உதவிகளை வழங்கி அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பேசியதாவது,
ஏழைகளுக்கான ஆட்சியில் உங்கள் ஆதரவோடு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். முதல்-அமைச்சர் ஏழைகள் மீது பாசம் கொண்டவர். இந்த ஆட்சி ஏழைகளுக்கான ஆட்சி முதல்- அமைச்சர் பள்ளி குழந்தைகளுக்கு காலை உணவு அளிக்கிறார், அரசு பள்ளி மாணவிகளுக்கு உயர் கல்வி கற்க மாதம் ரூ.1000 வழங்குகிறார் விருதுநகர் மாவட்டத்திற்கு ஜவுளி பூங்கா மற்றும் தொழில் பூங்கா வர உள்ளது. இதன் மூலம் மாவட்டத்தில் படித்த இளைஞர்கள் மற்றும் பெண்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் நிலை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
எல்லோருக்குமான ஆட்சி
விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது, நிதி அமைச்சராக பொறுப்பேற்ற பின் முதலாவதாக இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆட்சி எல்லோருக்குமான ஆட்சி. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்பதே முதல்- அமைச்சரின் நோக்கம். அதுவே திராவிட மாடல் ஆட்சியாகும். தொடர்ந்து மாவட்டத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் விருதுநகர் சீனிவாசன், ராஜபாளையம் தங்கபாண்டியன், சிவகாசி மேயர் சங்கீதா இன்பம், விருதுநகர் யூனியன் தலைவர் சுமதி ராஜசேகர், நகர சபை தலைவர் மாதவன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.