மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்
x
தினத்தந்தி 18 May 2023 12:15 AM IST (Updated: 18 May 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கலெக்டர் வழங்கினார்

சிவகங்கை


மாற்றுத்திறனாளிகளுக்கு நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 91 ஆயிரம் மதிப்பீட்டில் பல்வேறு வகையான உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

குறைதீர் கூட்டம்

சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கான நடைபெற்ற சிறப்பு குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தேசிய அடையாள அட்டை பதிவு,, ஆதார் அட்டை பதிவு செய்தல், முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பதிவு மேற்கொள்ளுதல், பிற துறைகளின் செயல்படுத்தப்படும் திட்டங்களின் பயன்கள், உதவி உபகரணங்கள், வங்கிக்கடனுதவிகள், வேலைவாய்ப்பு பயிற்சிகள், பராமரிப்பு உதவித்தொகை மற்றும் மாதாந்திர உதவித்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான 71 மனுக்கள் பெறப்பட்டன.

மாற்றுத்திறனாளிகள்

கூட்டத்தில் ரூ.92 ஆயிரம் மதிப்பீட்டில் செவித்திறன் பாதிக்கப்பட்ட 8 மாற்றுத்திறனாளிகளுக்கு தக்க செயலியுடன் கூடிய திறன்பேசிகளும், 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.41 ஆயிரத்து 40 மதிப்பீட்டில் மோட்டார் பொருத்திய தையல் எந்திரங்களும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.23 ஆயிரத்து 700 மதிப்பீட்டில் மடக்கு சக்கர நாற்காலிகளும், 3 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.21 ஆயிரத்து 270 மதிப்பீட்டில் மூன்று சக்கர சைக்கிள்களும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1,200 மதிப்பீட்டில் முழங்கை தாங்கிகளும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.11 ஆயிரத்து 280 மதிப்பீட்டில் காதொலிக்கருவிகளும், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூபாய் ஆயிரம் மதிப்பீட்டில் கருப்பு கண்ணாடி மற்றும் மடக்கு ஊன்றுகோல்களும் மற்றும் ஒருவருக்கு முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் மருத்துவ காப்பீட்டிற்கான அட்டை என மொத்தம் 29 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 91 ஆயிரத்து 490 மதிப்பீட்டிலான பல்வேறு வகையான உதவி உபகரணங்களை கலெக்டர் வழங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிவகங்கை கோட்டாட்சியர் சுகிதா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல், தனித்துணை ஆட்சியர் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சாந்தி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story