243 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

சிவகங்கையில், தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலரினை வெளியிட்டு, 243 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டிலான, அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
சிவகங்கை
சிவகங்கையில், தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலரினை வெளியிட்டு, 243 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 66 லட்சம் மதிப்பீட்டிலான, அரசின் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் வழங்கினார்.
பயனாளிகள்
தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலரினை வெளியிட்டு, பயனாளிகளுக்கு பல்வேறு துறைகளின் சார்பில் அரசின் நலத்திட்ட உதவிகளை வழங்கும் விழா சிவகங்கை கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட கலெக்டர் ஆஷாஅஜீத் தலைமையில் நடைபெற்றது.
காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி முன்னிலை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன் வரவேற்று பேசினார்.
விழாவில் கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தமிழக அரசின் 2 ஆண்டு சாதனை மலரினை வெளியிட்டு பேசியதாவது:-
பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு, அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் எண்ணற்ற திட்டங்களை தமிழகத்தில் முதல்-அமைச்சர் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, தேர்தல் சமயங்களில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றிடும் பொருட்டு, அனைத்துத் திட்டங்களும் செயல்படுத்தப்படுவது மட்டுமன்றி, புதிதாகவும் பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை முதல்-அமைச்சரால் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
நலத்திட்ட உதவிகள்
அரசின் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 243 பயனாளிகளுக்கு ரூ.2.66 கோடி மதிப்பீட்டிலான அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிகழ்ச்சியில், தமிழக அரசின் ஈராண்டு சாதனை மலரை கூட்டுறவுத்துறை அமைச்சர் வெளியிட, அதனை மாவட்ட கலெக்டர், எம்.எல்.ஏ. மற்றும் அரசுத்துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகள் பெற்றுக் கொண்டனர்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், சிவகங்கை வருவாய் கோட்டாட்சியர் சுகிதா, சிவகங்கை நகர்மன்றத் தலைவர் .துரைஆனந்த், மாவட்டதி.மு.க. துணை செயலாளர்கள் சேங்கைமாறன், மணிமுத்து, சிவகங்கை ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) ரத்தினவேல் நன்றி கூறினார்.






