250 பேருக்கு நலத்திட்ட உதவிகள்


250 பேருக்கு நலத்திட்ட உதவிகள்
x

காரியாபட்டி அருகே 250 பேருக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஜெயசீலன் வழங்கினார்.

விருதுநகர்

காரியாபட்டி ஒன்றியம் எஸ்.கல்லுப்பட்டி கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் முத்துமாரி தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் லட்சுமணன் முன்னிலை வகித்தார். அருப்புக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் மாரிமுத்து வரவேற்றார்.

கலெக்டர் ஜெயசீலன் 250 பயனாளிகளுக்கு ரூ.16 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:- மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதற்காக அரசு துறை அதிகாரிகள் மக்களை தேடி நேரில் வந்து நிறைவேற்றுவதற்காக தான் இதுபோன்ற குறைதீர்க்கும் நாள் கூட்டங்களை அரசு நடத்தி வருகிறது.இன்றைய கால கட்டத்தில் பல்வேறு உணவு பழக்கங்களால் மக்கள் பலவிதமான நோய்களால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நம்முடைய பண்டைய கால சிறுதானிய பயிர் உணவுகளை உட்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கின்றோம். ஆகையால் விவசாய பெருமக்கள் சிறுதானிய பயிர் உற்பத்திக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.தமிழக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. மக்கள் அரசின் திட்டங்களை முழுமையாக பயன்படுத்தி கொள்ள வேண்டும். இன்றைய குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் கொடுத்த கோரிக்கைகளான பேவர்பிளாக் சாலை, வெள்ளாகுளம் சாலை பராமரிப்பு, சின்னகல்லுப்பட்டியில் ரேஷன்கடை, மக்கள் பங்களிப்புடன் வணிக வளாகம் ஆகிய கோரிக்கைகளை நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும். தேசிய நெடுஞ்சாலையில் ஹைமாஸ் மின் விளக்குக்குரிய மின்கட்டணத்தை ஊராட்சி நிர்வாகம் கட்டுவதற்கு அனுமதி இருந்தால் உடனடியாக மின் விளக்கு அமைத்து கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story