மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்
x

அரக்கோணத்தில் நடந்த முகாமில், மாற்றுத்திறனாளிகளுக்கு, கலெக்டர் வளர்மதி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

ராணிப்பேட்டை

நலத்திட்ட உதவி

அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், ஊரக வளர்ச்சி, ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம் ஆகியவை இணைந்து அரக்கோணம் அடுத்த சாலை கைலாசபுரத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கான சிறப்பு முகாம் நடைபெற்றது.

முகாமில் 657 பேர் கலந்து கொண்டனர். இதில் மாவட்ட கலெக்டர் வளர்மதி கலந்து கொண்டு 159 பேருக்கு மருத்துவ சான்றுடன் கூடிய அடையாள அட்டைகள், ரூ.75 ஆயிரம் மதிப்பீட்டில் காதொலி கருவி, சக்கர நாற்காலி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

மனு வழங்கினர்

மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்துவம் வாய்ந்த தேசிய அடையாள அட்டை 89 பேருக்கும், முதல்-அமைச்சர் காப்பீடு திட்டத்தில் 92 பேருக்கு பதிவும், 5 மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை அவயங்கள் பொருத்துவதற்கான அளவுகளும் எடுக்கப்பட்டது. தொடர்ந்து, 257 பேர் மாதாந்திர உதவித் தொகை கோரியும், 82 பேர் வங்கிக் கடனுதவி கேட்டும், 13 பேர் வேலைவாய்ப்பு வேண்டியும், மாவட்ட தொழில் மையம் சார்பில் தொழிற் கடனுதவி வேண்டி 15 பேர், திறன் வளர்ப்பு பயிற்சி வேண்டி 11 பேர், தாட்கோ மூலம் வங்கிக் கடனுதவி வேண்டி 7 பேர், இலவச வீடு வேண்டி 57 பேர், இலவச வீட்டுமனை பட்டா கேட்டு 89 பேர் மனு வழங்கினர்.

முகாமில் அரக்கோணம் ஒன்றியக் குழுத் தலைவர் நிர்மலா சவுந்தர், சமூக பாதுகாப்பு திட்ட துணை கலெக்டர் ஸ்ரீவள்ளி, மாற்றுத்திறனாளிகள் நல வாரிய உறுப்பினர் தங்கம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், அரக்கோணம் தாசில்தார் சண்முகசுந்தரம், ஊராட்சி மன்ற தலைவர்கள் கோபி, உமாமகேஸ்வரி மற்றும் மாற்றுத்திறனாளி நல அலுவலக ஊழியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story